திருடப்பட்ட நகைகள்... பக்கத்து வீட்டுக்காரரை அடித்து துவைத்த குடும்பம்! தற்கொலையில் குட்டு வெளியானது

Report Print Abisha in இந்தியா

சொந்த வீட்டில் உள்ள நகைகளை அடமான வைத்துவிட்டு திருட்டு போனதாக நாடகமாடிய தொழில் அதிபர் தற்கொலை செய்து கொண்டார்.

ராமநாதபுரம் மாவட்டத்தின் அருகே உள்ள ஆற்றாங்கரை பகுதியை சேர்ந்தவர் குத்புதீன். துணிக்கடை வைத்து நடத்தி வருகிறார்.

இவர், தனது வீட்டில் உள்ள 126 சவரன் நகைகளை காணவில்லை என்று பொலிசில் புகார் கொடுத்துள்ளார்.

இதனிடையே, பக்கத்து வீட்டுகாரர் இந்த திருட்டில் ஈடுபட்டிருக்கலாம் என்று குத்புதீன் உறவினர்கள், அவர்களை அடித்து துவைத்துள்ளனர்.

இந்நிலையில், இது குறித்து விசாரணையில் இறங்கிய பொலிசார், வீட்டில் திருடங்கள் யாரும் வந்து சென்றதற்கான தடையங்கள் இல்லை என்பதால் குத்புதீன் வீட்டினர் மீது சந்தேகம் எழுந்துள்ளது.

இதனால், பதற்றத்துடன் காணப்பட்ட குத்புதீன் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

அதன் பின், அவரது கடையை சுத்தம் செய்தபோது, அதில் நகைகள் அடகு வைத்ததற்கான ஆவணங்கள் இருந்துள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்த உறவினர்கள் பொலிசில் தெரிவித்தனர்.

விசாரணையில் இறங்கிய பொலிசார், குல்புதீனுக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதும், மனைவிக்கு தெரியாமல் இருக்க மறைத்ததும், அதனால், நகைகள் அடமான வைத்துவிட்டு திருட்டு போனதாக நாடகமாடியது தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்