சீமானுடன் தனிமையில் இருந்த வீடியோக்களை வெளியிட்டது ஏன்? நடிகை விஜயலட்சுமி வேதனையுடன் வெளியிட்ட வீடியோ

Report Print Santhan in இந்தியா

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமானுடன், தனிமையில் இருக்கும் வீடியோக்களை வெளியிட்டது ஏன் என்று நடிகை விஜயலட்சுமி விளக்கமளித்துள்ளார்.

நேற்று திடீரென்று சமூகவலைத்தளங்களில் சீமானின் வீடியோ ஒன்று வைரலானது. அதில் சீமான் மேல் ஆடை இல்லாமல் இருப்பது போன்றும், அவர் யாரோ பெண் ஒருவருடன் தனிமையில் இருப்பது போன்றும் இருந்தது.

அதன் பின் அது யாரும் இல்லை, நடிகை விஜயலட்சுமியுடன் தான், சீமான் இப்படி இருந்திருக்கிறார் என்றும், இந்த வீடியோவை வெளியிட்டதே விஜயலட்சுமி தான் என்பதும் தெரியவந்தது.

இந்நிலையில் தற்போது விஜயலட்சுமி நான் ஏன் அந்த வீடியோ வெளியிட்டேன் என்று கூறியுள்ளார். அதில், நான் ஏதோ ஒரு கெட்ட பொண்ணு, பணத்திற்காக எது வேண்டும் என்றாலும் செய்வேன் என்று சீமான் கூறுகிறார்.

இதன் காரணமாகவே நான் அவருடன் இருந்த வீடியோவை வெளியிட்டேன். நான் பணத்திற்காக என்ன வேண்டும் என்றாலும் செய்வேன் என்று கூறியதால், திரையுலகில் பலரும் என்னை விட்டு விலகிவிட்டனர். ஒரு பெண் எப்படி இதை எல்லாம் பொய் சொல்லுவாள், நீங்கள் எல்லாம் இதை நம்ப வேண்டும்.

உங்களை நம்பி தான் வீடியோவை வெளியிட்டேன். இந்த வீடியோ பதிவேற்றம் செய்யும் போது கூட கஷ்டமாக இருந்தது. இருப்பினும் நான் என்னுடைய நியாயத்தை நிரூபிக்க வேண்டும் என்பதற்காகவே வீடியோவை வெளியிட்டேன்.

ஆனால் இது குறித்து பத்திரிக்கையாளர்கள் கேட்ட போது, சீமான் ஏதோ இது எல்லாம் ஒரு விஷயமா என்று சாதரணமாக சிரித்து செல்கிறார். ஒரு பெண்ணின் வாழ்க்கையை கெடுத்துவிட்டு, இப்படி சிரிப்பதில் இருந்தே அவர் பதில் கூற முடியாமல் நழுவுகிறார் என்பது தெளிவாக தெரிகிறது.

மக்களே நன்றாக தெரிந்து கொள்ளுங்கள் என்று தொடர்ந்து பேசும் வீடியோ இப்போது வைரலாகி வருகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்