பெரு நகரை ஸ்தம்பிக்க செய்த இஸ்லாமியர்களின் போராட்டம்! விடிய விடிய அசராத பெண்கள்

Report Print Abisha in இந்தியா

சென்னை வண்ணாரப்பேட்டையில், நேற்றிரவு சிஏஏ-க்கு எதிராக இஸ்லாமிய அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டபோது தடியடி நடத்தியதால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தற்போதும் போராட்டம் நடைபெற்று வருகிறது.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பழைய வண்ணாரபேட்டையில் இஸ்லாமிய அமைப்புகள் நேற்றிரவு போராட்டத்தில் ஈடுபட்டனர். நீண்ட நேரம் போராட்டம் நீடித்ததால், கலைந்து செல்லுமாறு காவல்துறையினர் கேட்டுக்கொண்டனர்.

ஆனால், அவர்கள் அங்கிருந்து செல்லவில்லை. அப்போது காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கு இடையே தள்ளமுள்ளு ஏற்பட்டது. அதில், காவல்துறையினர் 120பேரை கைது செய்தனர்.

இதை கண்டித்து பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் போராட்டத்தை தொடர்ந்தனர். இதையடுத்து சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் இஸ்லாமிய அமைப்பினருடன் பேச்சு வார்த்தை நடத்தினார். அதன் பின் கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

எனினும் காவல்துறையினரின் அணுகுமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து, திருவல்லிக்கேணி, பாரிமுனை, கிண்டி, ஆலந்தூர் உள்ளிட்ட முக்கிய சாலைகளில் இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், நள்ளிரவில், போக்குவரத்து நெரிசல் அதிகமானது.

அத்துடன், வண்ணாரப்பேட்டையில் விடியவிடிய போராட்டம் தொடர்ந்து வருகிறது. குடியுரிமை திருத்த சட்டம் திரும்ப பெறவேண்டும் என்று பெண்கள் அமர்ந்து கோஷம் எழுப்பி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers