40 பெண்களை மிரட்டி கணவன் நெருக்கம்! மனைவிடம் சிக்கிய வீடியோக்கள்... அதன் பின் நடந்த சம்பவம்

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் கணவன் பல பெண்களை மயக்கி உல்லாசமாக இருந்த வீடியோவை மனைவி நீதிமன்றத்தில் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் மணப்பாறை மஸ்தான் தெருவை சேர்ந்தவர் எட்வின் ஜெயக்குமார் (36). இவருக்கும் தஞ்சை மாவட்டம் வல்லம் அருகே ரெட்டிப்பாளையத்தை சேர்ந்த பட்டதாரி பெண் தாட்சர் (32) என்பவருக்கும் கடந்த டிசம்பர் 2-ஆம் திகதி திருமணம் நடைபெற்றது.

ஜெயக்குமார், புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உள்ள இந்தியன் வங்கியில் காசாளராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் திருமணம் முடிந்த முதல் இரவில், ஜெயக்குமார் மனைவியிடம் பேசாமல் தனி அறையில் செல்போனில் யாருடனோ விடியும் வரை பேசிக் கொண்டிருந்துள்ளார்.

முதலில் இதை பெரிதாக எடுத்து கொள்ளாமல் இருந்த தாட்சர், அதன் பின் அவரை கண்காணித்த போது பல பெண்களிடம் செல்போனில் அவர் ஆபாசகாம பேசியது அவருக்கு தெரியவந்துள்ளது. இதன் காரணமாகவே அவர் தன்னை நெருங்குவதில்லை என்ற சந்தேகம் அவருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் கணவர் வங்கி வேலைக்கு சென்றவுடன், அவரின் அறையை மனைவி, தாட்சர் சோதனையிட்டுள்ளார். அப்போது அந்த அறையில், 15 செல்போன்களை கண்டுபிடித்த அவர், அந்த போன்களில் கணவர் பல பெண்களிடம் நிர்வாண நிலையில், அவர்களுக்கே தெரியாமல் எடுத்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் இருந்துள்ளது.

இப்படி அவர் 40-க்கும் மேற்பட்ட பெண்களுடன் உல்லாசமாக இருக்கும் வீடியோ இருந்துள்ளது. மேலும் செல்போன்களின் வாட்ஸ் அப்பில் பல பெண்களிடம் உல்லாசத்தில் ஈடுபட வற்புறுத்தும் குறுஞ்செய்திகள் மற்றும் எட்வின் ஜெயக்குமார் பாத்ரூமில் நிர்வாணமாக நின்றபடி பல பெண்களுடன் வீடியோ கால் பேசி அதை செல்போனில் பதிவு செய்ததும் தெரியவந்தது.

இதுகுறித்து தனது மாமியார், கணவரின் தங்கை, அவர்களது உறவுக்கார பெண் ஆகியோரிடம் தனது கணவர் பற்றி தாட்சர் கேட்டுள்ளார்.

ஆனால் அவர்கள் யாரும் அதை கண்டுகொள்ளவில்லை. தனது அந்தரங்கங்கள் தெரிந்து விட்டதை தனது தாய் மூலம் அறிந்து கொண்ட எட்வின் ஜெயக்குமார், வீட்டுக்கு வந்து மனைவியை திட்டியுள்ளார்.

அதே வங்கியில் பணியாற்றும் தேவி பிலோமினா தனது கணவரின் கள்ளக்காதலி என்பதையும் அறிந்து கொண்டு தாட்சர் கேட்டபோது, கணவர் சரியான பதில் அளிக்கவில்லை.

மேலும் இதுகுறித்து யாரிடமும் சொல்லக்கூடாது. அப்படி சொன்னால் நீ குளிக்கும்போது ஆபாசமாக வீடியோ எடுத்து வைத்துள்ளேன். இதே வீடியோ தனது கள்ளக்காதலியிடம் உள்ளது. எங்களை பற்றி வெளியே சொன்னால் அந்த வீடியோ, புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவோம் என மிரட்டியதால், அதிர்ச்சியடைந்த அவர், இது குறித்து பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து உடனடியாக தாட்சர் பெற்றோர் வந்து ஜெயக்குமாருடன் பேசியுள்ளனர்.

தனது அந்தரங்கத்தை மனைவி வெளியே சொல்லி விட்டதால் ஆத்திரமடைந்த ஜெயக்குமார், மனைவியை 2 முறை வெளியே ஆலயத்துக்கு அழைத்து சென்று கொலை செய்ய முயற்சித்துள்ளார்.

இக்கொலை முயற்சியில் இருந்து தப்பிய தாட்சர், வல்லம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் செய்துள்ளார். ஆனால் அப்பெண்ணின் புகாரை பொலிசார் வாங்க மறுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் தஞ்சை சரக டிஐஜி லோகநாதனிடம் புகார் செய்தார். இதையடுத்து அவரது உத்தரவின்பேரில் எட்வின் ஜெயக்குமார், அவரது தாய் லில்லி ஹைடா, சகோதரி கேத்தரின் நிர்மலாமேரி, உறவினர் ரீட்டா, வங்கி ஊழியர் தேவி பிலோமினா ஆகிய 5 பேர் மீது வல்லம் அனைத்து மகளிர் பொலிசார் வழக்கு பதிவு செய்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் எட்வின் ஜெயக்குமார், மதுரை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றார்.

இதனால் அதிர்ச்சியடைந்த தாட்சர், கணவரின் அந்தரங்க புகைப்படங்கள், ஆபாச வீடியோக்களை மதுரை உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோரினார். மனுவை விசாரித்து எட்வின் ஜெயக்குமார் மீது ஜாமீனில் வெளிவர முடியாத வழக்குகளை பதிவு செய்து உடனடியாக கைது செய்ய மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து கடந்த 7-ஆம் திகதி எட்வின் ஜெயக்குமார் உட்பட 5 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளதால், வல்லம் அனைத்து மகளிர் பொலிசார் தேடி வருகின்றனர். பொலிசார் தேடுவதை அறிந்த எட்வின் ஜெயக்குமார் தனது குடும்பத்துடன் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்