பேருந்து மீது கண்டெய்னர் லொறி மோதி பயங்கர விபத்து..! 20 பேர் உயிரிழப்பு.. ஓட்டுநர் தலைமறைவு

Report Print Basu in இந்தியா

தமிழ்நாட்டில் பேருந்துடன் கண்டெய்னர் லொறி மோதி விபத்துக்குள்ளானத்தில் உயரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது.

திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே அமைந்து தேசிய நெடுஞ்சாலையிலே அதிகாலை 4.30 மணிக்கு இக்கோர விபத்து நடந்துள்ளது.

பெங்களுரிலிருந்து எர்ணாகுளம் நோக்கிச் கேரளா பேருந்து சென்றுக் கொண்டிருந்த நிலையில், எதிர் திசையில் சாலையின் மறுபக்கம் அதிகவேகத்தில் பயணித்த கண்டெய்னர் லொறி, நெடுஞ்சாலையின் குறுக்கே இருந்த பாதுகாப்பு சுவரை உடைத்துக்கொண்டு பேருந்து மீது நேருக்கு நேர் மோதியுள்ளது.

தகவலறிந்து சம்பவயிடத்திற்கு விரைந்த பொலிஸ் மற்றும் தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.

பேருந்தில் 48 பயணிகள் பயணித்ததாக கூறப்படும் நிலையில் தற்போது வரை 6 பெண்கள் உட்பட 20 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விபத்தை அடுத்து கண்டெய்னர் லொறியை ஓட்டி வந்த நபர் தலைமறைவாகியுள்ளார்.

இறந்தவர்களை அடையாளம் காணும் பணியை மேற்கொண்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...