அண்ணன் சீமானை பத்தி தப்பா பேசினா அவ்வளவு தான்! நீயெல்லாம் ஒரு பெண்ணா? விஜயலட்சுமியை வெளுத்த தங்கை காளியம்மாள்

Report Print Raju Raju in இந்தியா

சீமான் பற்றிய வீடியோ மற்றும் கருத்துக்களை வெளியிட்டு வரும் நடிகை விஜயலட்சுமிக்கு எதிராக நாம் தமிழர் கட்சியின் முக்கிய பேச்சாளர் காளியம்மாள் கொந்தளித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குறித்து நடிகை விஜயலட்சுமி சில வீடியோக்களை வெளியிட்டிருந்தார்.

அதில் விஜயலட்சுமியுடன் சீமான் கேக் வெட்டுவது , மற்றும் சட்டை இல்லைமல் இருப்பது போன்ற வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

சீமான் இதுவரையில் இதற்கு எதிர்வினையாற்றவில்லை.

இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் நட்சத்திர பேச்சாளரும், சீமானை எப்போதும் அண்ணன் என அன்போடு அழைக்கும் அவர் தங்கை போன்ற உறவை கொண்ட காளியம்மாள், விஜயலட்சுமியை வெளுத்து வாங்கியுள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் பொதுக் கூட்டத்தில் பேசிய காளியம்மாள், நீயெல்லாம் ஒரு பெண்ணென்று சொல்லிட்டு திரியாதே, பெண்களுக்கு தேர்தலில் சம வாய்ப்பு தந்திருக்கும் ஒரே கட்சி நாம் தமிழர் தான்.

அப்படிப்பட்ட தலைவரைப் பெண்களை வலிமைப்படுத்துவதாக ஒப்பிட்டு அந்த அம்மா சொல்லிட்டு கிடக்கு. ஒரு தாய்க்கு ஒரு பிள்ளையின் அருமை தெரியுமா? அன்பு தெரியுமா? உணர்வு தெரியுமா? அந்த இணக்கம்தான் எங்கள் அண்ணனுக்கும் எங்களுக்கும் இருக்கக்கூடிய உணர்வு.

இனி ஒரு நாக்கு, எங்க அண்ணனையும், மத்த பெண்களையும் ஒன்றுபடுத்தி பேசினாய் என்றால் அவ்வளவு தான்.

அண்ணன்-தங்கையாக பேசு, தகப்பன்-மகளாக பேசு, வேற எந்த உறவையாவது சொல்லி பேசுனா நடக்கிறதே வேற., எல்லா பெண்களும் கொந்தளிச்சுடுவோம்.

நீயெல்லாம் ஒரு பெண் என சொல்லி கொண்டு திரியாதே. யாராவது பணம் கொடுத்தால், வீட்டு கஷ்டத்துக்காக விலைமாதுவாக போகக்கூடிய பெண்களை கூட நான் பார்த்திருக்கிறேன்.

ஆனால் கருத்தியலைக் களவாடி காசுக்கு வாங்கிட்டு விற்கக்கூடிய பச்சை துரோகியை இங்க தான் பார்க்கிறேன் என பேசியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்