இந்தியன் 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட உயிரிழப்புகள்! கமல்ஹாசன், ஷங்கரை விசாரணைக்கு ஆஜராகுமாறு பொலிசார் சம்மன்

Report Print Raju Raju in இந்தியா

இந்தியன் 2 படப்பிடிப்பு விபத்து தொடர்பாக நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் ஷங்கருக்கு பொலிசார் சம்மன் அனுப்ப்யுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாஸன் நடித்து வரும் இந்தியன் 2 படப்பிடிப்பு நடந்து வந்த ஈவிபி ஸ்டுடியோஸில் கிரேன் அறுந்து விழுந்த விபத்தில் உதவி இயக்குநர் கிருஷ்ணா, ப்ரொடக்ஷன் உதவியாளர் மது, ஆர்ட் அசிஸ்டன்ட் சந்திரன் ஆகியோர் உயிர் இழந்தனர்

இறந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ 1 கோடி வழங்கப்படும் என நடிகர் கமல்ஹாசன் நேற்று அறிவித்தார்.

இந்த விபத்து தொடர்பாக லைகா நிறுவன், தயாரிப்பு நிர்வாகி, கிரேன் உரிமையாளர், கிரேன் ஆப்ரேட்டர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்தியன் 2 படப்பிடிப்பு விபத்து தொடர்பாக நடிகர் கமல், இயக்குநர் ஷங்கருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

ஈவிபி பிலிம் சிட்டியில் நடந்த விபத்து தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு பூவிருந்தவல்லி பொலிசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

மேலும் விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கும் சம்மன் அனுப்பி விசாரிக்க பொலிசார் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்