தேனிலவு முடித்து திரும்பிய சில நாட்களில்... புதுமணப் பெண்ணை சடலமாக பார்த்த கணவன்

Report Print Arbin Arbin in இந்தியா

தமிழகத்தை உலுக்கிய கொடூர பேருந்து விபத்தில் திருமணம் முடித்து சில வாரங்களேயான புதுமணப்பெண்ணும் சிக்கியுள்ளது தற்போது வெளியாகியுள்ளது.

கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர் ஸ்னிஜோ ஜோஸ். பெங்களூருவில் பணியாற்றும் தமது மனைவியின் வருகைக்காக சம்பவத்தன்று பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்துள்ளார்.

குறிப்பிட்ட நேரம் கடந்தும் தமது மனைவி அனுவிடம் இருந்து எந்த தகவலும் இல்லை என்பதால், அவரது மொபைலில் தொடர்பு கொண்டுள்ளார்.

ஆனால் அவரது மொபைலை எடுத்துப் பேசியவர் சொன்ன தகவல் ஸ்னிஜோவுக்கு பேரிடியாக அமைந்துள்ளது.

தமிழகத்தின் அவினாசியில் குறித்த பேருந்துடன் லொறி ஒன்று மோதியதில், அதில் பயணம் செய்த அனு உள்ளிட்ட 19 பேர் உடல் நசுங்கி பலியாகியுள்ளனர்.

அனு மற்றும் ஸ்னிஜோவுக்கு திருமணம் முடிந்து ஒரு மாதமே ஆகியுள்ளது. சமீபத்தில் தான் இருவரும் டெல்லி மற்றும் இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளுக்கு தேனிவு கொண்டாடிவிட்டு திரும்பியுள்ளனர்.

அனு பெங்களூருவில் பணியாற்றுவதால், திருச்சூரில் இருக்கும் கணவரை காண சம்பவத்தன்று அந்த பேருந்தில் திரும்பியுள்ளார்.

இதனிடையே பேருந்து விபத்து குறித்த தகவல் அறிந்து உடனடியாக அவினாசிக்கு விரைந்துள்ளார் ஸ்னிஜோ.

அவினாசியில் குறிப்பிட்ட மருத்துவமனைகளை தேடி அலைந்த ஸ்னிஜோ இறுதியில் அனுவின் சடலத்தை மருத்துவமனை ஒன்றில் கண்டுபிடித்துள்ளார்.

கட்டாரில் பணியாற்றும் கணவர் ஸ்னிஜோவை வழியனுப்பி வைக்கவே அனு, பெங்களூருவில் இருந்து திருச்சூர் திரும்பியுள்ளார்.

இறுதியில் கணவரை இறுதியாக ஒருமுறை பார்க்காமலையே அனு விடைப்பெற்று சென்றுள்ளது குடும்பத்தாரை உலுக்கியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்