என்ன ஆனாலும் சரி அவர்களை தீர்த்து கட்டனும்! கணவர் இராணுவத்தில் இருக்கும் நிலையில் நடிகை செய்த மோசமான செயல்

Report Print Raju Raju in இந்தியா

கணவன் நாட்டிற்காக ராணுவத்தில் பணியாற்றி வரும் நிலையில் இரண்டு ஆண்களை, கூலிப்படையை வைத்து கொலை செய்ய திட்டமிட்ட பெண் குறித்த அதிர்ச்சி ஓடியோ வெளியாகியுள்ளது.

தேனிமாவட்டம் கொடுவில்லார்பட்டியை அடுத்த நாகலாபுரம் கிராமத்தை சேர்ந்த மதுரைசுகந்தி என்பவர் டிக்டாக்கில் மிக பிரபலம்.

சுகந்தியின் கணவர் இராணுவத்தில் பணிபுரியும் நிலையில் இவர் சினிமாவில் துணை நடிகையாக உள்ளார்.

இந்நிலையில் சுகந்தியும், அவரது சகோதரியும் டிக்டாக்கில் வீடியோக்களை வெளியிட்டு வந்தனர். அதில் ஆபாச வசனங்களும், பாடல்களுமே அதிகமாக இடம்பெற்றிருந்தன.

இந்நிலையில் சுகந்தியின் செயல்பாடுகளை கண்டித்த ஊர்மக்களை திட்டி அவர் வீடியோ வெளியிட்டார்.

இதனால் கடுப்பான ஊர் மக்கள் சுகந்தியை ஊரை விட்டே துரத்தியதோடு அவர் மீது பொலிசில் புகார் அளித்தனர்.

இதையடுத்து தன் மீது கலங்கம் ஏற்படுத்த இரண்டு டிக்டாக் வாலிபர்கள் தான் காரணம் என்பதை கண்டுபிடித்த சுகந்தி அவர்களை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார்.

அதன்படி கூலிப்படையைச் சேர்ந்த கார்த்தி என்பவரை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அதில், என்ன ஆனாலும் பரவாயில்லை. அவர்களை கொலை செய்ய வேண்டும். போட்டு தள்ளுவதே என் முடிவு. எந்த கேஸ் ஆனாலும் நான் பார்த்துக்கொள்கிறேன் என்று பேசும் ஆடியோ வெளியாகி பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது தலைமறைவாக உள்ள சுகந்தியை கைது செய்ய வேண்டும் என அவரின் ஊர் மக்கள் பொலிசாருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்