ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது சசிகலா செய்த செயல்- வருமான வரித்துறையின் தகவல்

Report Print Abisha in இந்தியா

ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போதே சசிகலா சொத்துகள் வாங்கியதாக வருமான வரித்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

ஜெயலலிதா கடந்த 2016ஆண்டு மருத்துவமனையில், அனுமதிக்கப்பட்டு அங்கேயே உயிரிழந்தார். அதே வேளையில், 2016ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் திகதி புழகத்தில் இருந்த 500, 100 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்தது.

அதை பயன்படுத்தி ஜெயலலிதா தோழி சசிகலா புதிதாக ஏராளமான சொத்துக்கள் வாங்கியுள்ளார்.

இதை வருமான வரித்துறை கண்டறிந்து, சசிகலாவுக்கு சொந்தமான இடங்கள் மற்றும் உறவினர் வீடுகளில் சோதனை நடத்தினர். அந்த சோதனையில் சசிகலா ரூ. 1,674 கோடியே 50 லட்சத்துக்கு செல்லாத நோட்டுகளை பயன்படுத்தி சொத்துகள் வாங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த சொத்துகளை சில பினாமிகள் மூலமாகவும் வாங்கியிருப்பது தெரியவந்துள்ளது. அதன்படி புதுச்சேரியை சேர்ந்த நகைக்கடை உரிமையாளர் மற்றம் அவரது குடும்பத்தினர் சசிகலாவின் பினாமிகள் என்று கண்டுபிடிக்கப்பட்டு அவர்களது சொத்துக்கள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்