லொட்டரியில் அடித்த மிகப் பெரிய அதிர்ஷ்டம்... பரிசு தொகையை வாங்க இருந்த நபருக்கு நேர்ந்த துயரம்

Report Print Santhan in இந்தியா

இந்தியாவில் 63 வயது நபர் ஒருவருக்கு 60 லட்சம் ரூபாய் பரிசு விழுந்த நிலையில், அதை பெறுவதற்கு முன் உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினரிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவின் Alappuzha மாவட்டம் Mavelikara கிராமத்தை சேர்ந்தவர் C Thambi. 65 வயது மதிக்கத்தக்க இவர் Mavelikara-Pandalam செல்லும் சாலை Kochalummoodu-வில் உள்ள கடையில் லொட்டரிகளை விற்றார்.

இவர் ஸ்ரீ சக்தி லாட்டரியின் 10 டிக்கெட்டுகளை விற்க முடியாததால், வீட்டில் வைத்திருந்துள்ளார். இருப்பினும் அந்த டிக்கெட்டுகளில் ஒரு டிக்கெட்டிற்கு முதல் பரிசு விழுந்துள்ளது.

இதனால் அதற்கான லொட்டரி டிக்கெட்டை எடுத்து சென்று தம்பி குறித்த வங்கியில் கொடுத்துள்ளார். அதற்கான சரிபார்ப்பு நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில், தம்பிக்கு திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து உடனடியாக மவேலிக்கர மாவட்டத்தில் இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். இருப்பினும் அவரை காப்பாற்ற முடியவில்லை, பரிதாபமாக உயிரிழந்தார்.

லொட்டரியில் விழுந்த பணத்தை வைத்து தன்னுடைய கடையை பெரிதுபடுத்த விரும்பிய இவர், குழந்தைகளுக்கு இது உதவும் என்ற மகிழ்ச்சியில் இருந்தார். ஆனால் அந்த பரிசுத் தொகையான 60 லட்சம் ரூபாயை வாங்காமல் துரதிரஷ்டவசமாக இறந்துள்ளார்.

தம்பிக்கு சரஸ்வதி என்ற மனைவியும், சரிதா மற்றும் சவிதா என்று இரண்டு மகள்களும், பிஜு மற்றும் அனில் என இரண்டு மகன்களும் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...