கட்டியணைத்து கண்ணீர் வடித்து பிரியாவிடை!: இறுதி பயணமாக முடிந்த கோர விபத்து - வைரல் வீடியோ

Report Print Abisha in இந்தியா

தமிழகத்தில், நிகழ்ந்த கோர விபத்தில் பலியான நபர், குறித்த வீடியோ ஒன்று பெருமளவில் பகிரப்பட்டு வைரலாகி வருகின்றது.

திருப்பூர் அவிநாசி அருகே, கேரள மாநில போக்குவரத்து கழகத்தின் பேருந்தின் மீது லொரி மோதி விபத்திற்குள்ளானது. இந்த கோர விபத்தில், 19 பேர் பலியாகினர், அதில் ஒருவர் தான் திருசூரை சேர்ந்த ஜோஃபி பால்.

இவர், பெங்களூரில் உள்ள ஜோய் ஆலுக்காஸ் நகைக் கடையின் மேலாளராகப் பணியாற்றி வந்தார். இவரது இழப்பால், ஜோஃபியின் உறவினர்களும் சக பணியாளர்களும் மிகுந்த வேதனையடைந்துள்ளனர்.

இது குறித்து அவரது நண்பர் கூறுகையில், “எப்போதும் சிரித்த முகம். நல்ல ஆளுமைப் பண்பு என்று தனக்கு கீழ் பணி செய்பவர்களை சிறப்பாக நடத்துவார். அதனாலேயே அனைத்து ஊழியர்களுக்கும் அவர் மீது தனிப்பாசமுண்டு. தனது குடும்பத்தினருடன் வேளாங்கண்ணி செல்ல வேண்டுமென்பது ஜோஃபியின் நீண்ட நாள் ஆசை. அதற்காக பெங்களூரில் இருந்து திருச்சூருக்கு புறப்பட்டார். இப்படியாகுமென்று தெரிந்திருந்தால் அவரை நாங்கள் அனுப்பியிருக்க மாட்டோம்” என்று கலகத்துடன் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, ஜேஃபி பெங்களூருக்கு முன்பு மைசூர் கிளையில் பணியாற்றிவந்துள்ளார். இதையடுத்து, கடந்த சில மாதங்களுக்கு முன்பு அங்கிருந்து அவர் பெங்களூருக்கு மாற்றப்பட்டுள்ளார். அப்போது, மைசூர் கிளையில் உள்ள ஊழியர்கள் அவரை பிரிவதற்கு மனமில்லாமல் காலில் விழுந்து கட்டியணைத்து, கண்ணீர் மல்க பிரியா விடை கொடுத்துள்ளனர்.

அந்த வீடியோ தற்போது பகிரப்பட்டு வருகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...