200க்கும் மேற்பட்ட வழக்குகளில் தேடப்பட்டு வந்த நிழல் உலக தாதா ஆப்பிரிக்காவில் கைது!

Report Print Vijay Amburore in இந்தியா

மும்பையில் பிரபலங்களிடம் மிரட்டி பணம் பறித்தது உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட வழக்குகளில் சிக்கி தலைமறைவாகியிருந்த நிழல் உலக தாதா ரவி புஜாரி தென் ஆப்பிரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தியாவில் கொலைகள், மிரட்டி பணம் பறித்தல், கடத்தல் மற்றும் பாலிவுட் நட்சத்திரங்கள் துவங்கி உயர்மட்ட அரசியல்வாதிகள் வரை அச்சுறுத்தல் விடுத்தல் என 200க்கும் மேற்பட்ட வழக்குகளில் தேடப்பட்டு வந்தவன் ரவி புஜாரி.

மும்பை நிழல் உலகில் கோலோச்சிய தாதா சோட்டா ராஜனின் உதவியாளராக இருந்து வந்த ரவி, ஒரு கொலை வழக்கில் ஜாமீனில் இருந்தபோது நாட்டை விட்டு வெளியேறி 20 வருடங்களாக தலைமறைவாக இருந்து வந்தான்.

இவன் கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி 21 ஆம் திகதி செனகல் நாட்டில் கைது செய்யப்பட்டபோது, ​​புஜாரி தனது பெயர் அந்தோணி பெர்னாண்டஸ் மற்றும் புர்கினா பாசோவின் குடிமகன் என்று கூறி தப்பினான்.

அந்த நேரத்தில், புர்கினா பாசோ குடியுரிமை பிரச்சினை ஒரு தடையாக இருந்ததால், அவரது உதவியாளர்களில் ஒருவரை வைத்து வேண்டுமென்றே தன் மீது பொய்யாக வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.

இதனால் அவரை இந்தியாவிற்கு நாடு கடத்த அதிகாரிகள் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்தன.

செனகலில் உள்ள ஒரு உள்ளூர் நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியதுடன், இந்த விவகாரத்தின் விசாரணை முடியும் வரை நாட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டது.

இருப்பினும், அவர் ஜாமீனில் தென்னாப்பிரிக்காவுக்கு தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. அங்கு அவன் ஒரு பெரிய போதைப்பொருள் கடத்தல் மற்றும் மிரட்டி பணம் பறித்தல் மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளான்.

ரவி பூஜாரி தென்னாப்பிரிக்காவின் தொலைதூர கிராமத்தில் அமைந்திருப்பதாக இந்திய புலனாய்வு அமைப்பிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், செனகல் காவல்துறை கடந்த வாரம் தென்னாப்பிரிக்காவுக்கு விமானத்தில் சென்றது.

அங்கு அவனை கைது செய்த பொலிஸார், "முறைசாரா முறையில்" இந்தியாவுக்கு நாடு கடத்த திட்டமிட்டுள்ளனர். அவன் திங்கட்கிழமையன்று இந்தியாவிற்கு கொண்டுவரப்படுவான் என நம்பப்படுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...