தூங்கிக் கொண்டிருந்த மகன் எழுத்த போது தாயை கண்ட காட்சி! விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி உண்மை

Report Print Santhan in இந்தியா

இந்தியாவில் மகன் உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டதாக தாய் கூறிய நிலையில், விசாரணையில் தாயே மகனை கொலை செய்துவிட்டு நாடகமாடியுள்ளது தெரியவந்துள்ளது.

தெலங்கானா மாநிலம் நல்லக்கொண்டா பகுதியை சேர்ந்த தாய் ஒருவர் தன்னுடைய 9 வயது மகன் உடல்நிலை சரியில்லாம இருப்பதாக கடந்த வெள்ளிகிழமை உறவினர்களிடம் கூறியுள்ளார்.

இதையடுத்து உறவினர்கள் அங்கு வந்து பார்த்த போது, சிறுவன் பேச்சு, மூச்சற்று கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். உடனடியாக இது குறித்து தந்தையிடம் கூறியுள்ளனர்.

அதன் பின் அவர் விரைந்து வந்து பார்த்த போது, மகன் இறந்துவிட்டான் என்பதை அறிந்துள்ளார். மகனை பார்த்த போது கழுத்தில் காயம் இருந்ததால், அவருக்கு மகனின் மரணத்தில் சந்தேகம் எழுந்துள்ளது.

இதனால் உடனடியாக அவர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

பொலிசார் இது குறித்து விசாரணை மேற்கொண்ட போது, சிறுவனின் மரணம் இயற்கையானது என்று அவரின் தாய் கூறியுள்ளர்.

இருப்பினும் பொலிசாருக்கு சந்தேகம் வலுத்ததால், அவரிடம் அவரிடம் நடத்திய தீவிர விசாரணையில் மகனை கழுத்தை இறுக்கிக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

இதுகுறித்து பொலிசார் கூறுகையில், அந்தப் பெண்ணுக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் இடையே பழக்கம் இருந்து வந்துள்ளது.

நாளடைவில் இவர்களின் பழக்கம் நெருக்கமானதால், இதனையறிந்த அந்தப் பெண்ணின் கணவர் அவரைக் கண்டித்துள்ளார்.

இருப்பினும், அந்தப்பெண் அவருடனான பழக்கத்தைத் துண்டிக்கவில்லை. இந்நிலையி தான் வெள்ளிக்கிழமை மதியம் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த அந்தப்பெண்ணின் 9 வயது மகன் தன் தாயை மற்றொரு நபருடன் நெருக்கமாக இருப்பதைப் பார்த்திருக்கிறான்.

தந்தையிடம் கூறிவிடுவேன் என தாயை மிரட்டியதால், இந்த விவகாரம் வெளியில் தெரிந்தால், பிரச்னையாகிவிடும் என்று தன் மகனையே கொலை செய்ய முடிவு செய்துள்ளார்.

அதன் படி, வீட்டில் இருந்த துண்டை எடுத்து மகனின் கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளார். உறவினர்களிடம் மகனுக்கு உடல்நிலை சரியில்லை எனக் கூறியுள்ளார். சிறுவனின் கழுத்தில் இருந்த காயத்தால் சந்தேகமடைந்து புகார் தெரிவித்தனர்.

சிறுவனை கொலை செய்யும்போது அந்த நபரும் அருகில் இருந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிகிறது. கொலையில் அவருக்கு பங்கு இருக்கிறதா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாக பொலிசார் கூறியுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...