தாஜ்மஹாலை பார்த்த டிரம்ப்.. இந்த சிலையை பார்க்காமல் சென்றது ஏன்? அதிர்ச்சியில் மோடி கட்சியினர்

Report Print Santhan in இந்தியா

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள டிரம்ப், குஜராத்தில் இருக்கும் உலகின் உயரமான சிலையை பார்க்கமல் சென்றது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இரண்டு நாள் பயணமாக இந்தியா சென்றுள்ளார். டிரம்ப்பின் முதல் இந்திய அரசுமுறை பயணம் இது என்பதால், அவர் இன்றும் நாளையும் இந்தியாவில் முக்கிய இடங்களை பார்வையிடவுள்ளார்.

இன்று காலை குஜராத் சென்ற அவர் நேரடியாக சென்று சபர்மதி ஆசிரமத்தை பார்வையிட்டார். அதன்பின் அஹமதாபாத் மைதானத்தில் மக்கள் முன்னிலையில் பேசினார். அதில் கிரிக்கெட் வீரர் சச்சினின் பெயரை தவறாக உச்சரித்த வீடியோ வைரலானது.

இதையடுத்து மாலை உத்திரப்பிரதேசம் சென்ற அவர், அங்கு ஆக்ராவில் இருக்கும் தாஜ்மஹாலை தன்னுடைய மனைவியுடன் கண்டுகளித்த இவர், மாலைக்கு பிறகு டெல்லியில் இருக்கும் சொகுசு விடுதி ஒன்றில் தங்கியுள்ளார்.

நாளை அவர் டெல்லியில் உள்ள அரசு பள்ளி ஒன்றை பார்வையிடுகிறார்.

இந்த நிலையில் குஜராத் வரை வரும் ஜனாதிபதி டிரம்ப் ஏன் குஜராத்தில் இருக்கும் சர்தார் வல்லபாய் பட்டேல் சிலையை பார்வையிடவில்லை? என்ற கேள்வி எழுந்துள்ளது.குஜராத்தில் நிறுவப்பட்டிருக்கும் சர்தார் வல்லபாய் பட்டேல் சிலையை பிரதமர் மோடி கடந்த 2018-ஆம் ஆண்டு திறந்து வைத்தார்.

இந்த சிலை ஒற்றுமைக்கான சிலை (என்று அழைக்கப்படுகிறது. குஜராத்தின் நர்மதை கரையில் இது நிறுவப்பட்டுள்ளது. இந்த சிலைதான் உலகிலேயே மிகவும் உயரமான சிலை ஆகும்.

இதன் உயரம் 182 அடியாகும். சீனாவின் ஸ்பிரிங் டெம்பிள் புத்தரின் 177 மீற்றர் சிலை கொண்டிருந்த பெருமையை இது முறியடித்துள்ளது.

அமெரிக்காவின் சுதந்திர தேவி சிலையைவிட இது இரண்டு மடங்கு உயரம் கொண்டது. இவ்வளவு சிறப்பு கொண்ட சிலையை பார்வையிடாமல் டிரம்ப் ஏன் டெல்லி செல்கிறார் என்று கேள்வி எழுந்துள்ளது.

இந்தியாவின் அடையாளம் இந்த சிலைதான் என்று மோடி பேசி வந்தார். ஆனால் அதையே டிரம்ப் பெரிதாக கண்டுகொள்ளவில்லை.

அதே சமயம் உத்தர பிரதேச பாஜக அரசு தாஜ்மஹாலை புறக்கணித்து வருகிறது. ஆனால் டிரம்ப் அதை பார்வையிட்டார்.

பாஜக புறக்கணித்து வரும் ஒரு இடத்தை டிரம்ப் சென்று பார்த்துள்ளதால், அந்த இடத்திற்கு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை அதிகமாகும் என்பதால், இது பாஜகவிற்கு அதிர்ச்சியான விஷயமாக இருக்கும்.

ஆனாலும் அதிபரின் பயண திட்டத்தில் இந்தியா பெரிய அளவில் தலையிட முடியாது. பிரதமர் மோடி கட்டிய 182 அடி பட்டேல் சிலை இருக்கும் போது, தாஜ்மஹாலை டிரம்ப் பார்வையிட்டுள்ளார். இதுவரை பட்டேல் சிலையை டிரம்ப் பார்வையிடவுள்ளார் என்று எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை.

டிரம்ப்பின் இந்த முடிவிற்கு என்ன காரணம் என்று இன்னும் முழுதாக தகவல் வெளியாகவில்லை. வரலாற்று ரீதியாக தாஜ்மஹால் பெரிய புகழ் கொண்டது.

அதனால் அவர்கள் இதை தெரிவு செய்து இருக்கலாம். இந்தியா என்றால் தாஜ்மஹால் என்ற பிம்பம் இன்னும் உலக அரங்கில் உயர்ந்து நிற்கிறது என்பது டிரம்ப் மூலம் மீண்டும் நிரூபணமாகியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...