மேற்கு வங்கத்தில் ரயிலில் ஏற முயன்ற போது தவறி விழுந்து சக்கரத்தில் சிக்கவிருந்த நபரை, ரயில்வேயில் பணிபுரியும் பொலிஸ் ஒருவர் வேகமாக ஓடிச்சென்று காப்பாற்றியுள்ளார்.
இந்தியாவின் மேற்குவங்கத்தை சேர்ந்த சுஜோய் கோஷ் என்பவர் கடந்த வெள்ளிக்கிழமை இரவு 10:00 மணியளவில், காரக்பூர்-அசன்சோல் பயணிகள் ரயிலில் ஏற முயன்றபோது தவறி விழுந்துள்ளார்.
பிளாட்பாரத்தின் சி.சி.டி.வி காட்சிகள் கோஷ் ரயிலால் இழுத்துச் செல்லப்படுவதையும், படிக்கட்டுகளும் ரயில்பெட்டிகளும் அவரது தலை மற்றும் கால்களில் தாக்குவதையும் காட்டுகிறது.
நல்லவேளையாக இதனை கவனித்த ரயில்வே பொலிஸார் ஒருவர் வேகமாக ஓடிச்சென்று கோஷ் கால்களை பிடித்து வெளியில் இழுத்துள்ளார்.
இதனையடுத்து உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டு, கோஷ் அங்கிருந்து மிட்னாபூர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் சிகிச்சைக்கு பின் நல்ல நிலையில் இருந்ததாக கூறப்பட்டுள்ளது.
#WATCH: CCTV footage shows how RPF constable D.K. Yadav rescued middle-aged man, who slipped and fell while trying to board a running train at #Midnapore railway station in #WestBengal on Friday (21.02.2020) at around 9:44 pm. #RPFSavesPassenger pic.twitter.com/aXRUmBprCW
— Deepayan Sinha (@sdeepayan) February 22, 2020