மசூதி உச்சியில் காவிக்கொடி ஏற்றி அட்டுழியம்! தீ வைத்து கொளுத்திய கொடுமை: இந்துத்துவா வாதிகள் வெறியாட்டம்

Report Print Basu in இந்தியா

இந்திய தலைநகர் டெல்லியில் மசூதி உச்சியில் காவிக்கொடி ஏற்றப்பட்ட சம்பவம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் சமீபத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் 62 தொகுதிகளை கைப்பற்றி ஆம் அத்மி கட்சி மிகப்பெரிய வெற்றிப்பெற்றது. பாஜக 8 இடங்களை மட்டுமே வென்றது. காங்கிரஸ் கட்சி ஒரு தொகுதியில் கூட வெற்றிப்பெறவில்லை.

இதனையடுத்து, அரவிந்த் கெஜ்ரிவால் 3வது முறையாக டெல்லி முதல்வராக பதவியேற்றுக்கொண்டார்.

அதே சமயம் மாநிலத்தில் தொடர்ந்து குடியுரிமை சட்டத்திற்கு எதிரான சாகின் பாக் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனிடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை டெல்லியின் சில நகரங்களில் மீண்டும் வன்முறை வெடித்தது.

சிஏஏ-வுக்கு ஆதரவான மற்றும் எதிரான குழுவினருக்கிடையே மோதல் வெடித்ததாக கூறப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய வன்முறை கடந்த இரண்டு நாட்களாக அதிகரித்துக் கொண்டே வருகிறது.

வன்முறையால் 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 70 பேர் காயமடைந்துள்ளனர், இதில் குண்டடி பட்டவர்களும் அடங்குவர்.

டெல்லியில் உள்ள முஸ்லிம்களை குறிவைத்து தாக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகின. பத்திரிக்கையாளர்களும் தாக்கப்பட்டனர்.

இந்நிலையில், இது முஸ்லிம்களை குறிவைத்து நடத்தப்படும் வன்முறை என்பதை உறுதிப்படத்தும் வகையில் டெல்லி அசோக் நகரில் உள்ள மசூதியின் உச்சியில் ஏறி மர்ம நபர்கள் காவிக்கொடி பறக்கவிட்டுள்ளனர்.

மேலும், மசூதியை தகர்த்து தீ வைத்த கொளுத்தியுள்ளனர். குறித்த காட்சி இணையத்தில் வெளியாகி கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், குறித்த சம்பவம் நேற்று டெல்லிய அசோக் நகரில் நடந்தது தான் என உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்