தேயிலைத்தோட்டத்தில் இருந்து கேட்ட பெண்ணின் அழுகை குரல்! இரத்தம் படிந்த சட்டையுடன் ஓடிய இளைஞர்

Report Print Raju Raju in இந்தியா

கேரளாவில் தேயிலைத்தோட்டத்தில் 50 வயது பெண்மணி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் இளைஞரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

வண்டிப்பெரியார் நகரை சேர்ந்தவர் விஜயம்மா (50). இவர் இரு தினங்களுக்கு முன்னர் இரவு வீட்டருகில் உள்ள தேயிலைத்தோட்டத்துக்குள் புகுந்த தனது மாட்டை தேடி சென்றார்.

அப்போது அங்கிருந்த ரத்தீஷ் என்ற இளைஞர் விஜயம்மாவை பலாத்காரம் செய்தததோடு கத்தியால் தலையில் பலமுறை வேகமாக தாக்கியதாக கூறப்படுகிறது.

பின்னர் இரத்த வெள்ளத்தில் வலியால் துடித்த விஜயம்மா கதறி அழுத சத்தம் கேட்ட அருகிலிருந்தவர்கள் அங்கு ஓடி வந்தனர். ஆனால் அதற்குள் இரத்தம் படிந்த சட்டையுடன் ரத்தீஷ் ஓட்டம் பிடித்ததாக கூறப்படுகிறது.

பிறகு சில நிமிடங்களில் விஜயம்மா உயிரிழந்தார், சம்பவம் குறித்து தகவலறிந்த பொலிசார் அங்கு வந்து விஜயம்மாவின் சடலத்தை மீட்டதோடு அருகிலிருந்த செல்போனையும் கைப்பற்றினார்கள்.

பின்னர் தலைமறைவாக இருந்த ரத்தீஷை கைது செய்தார்கள்.

விஜயம்மா சடலம் அருகில் இருந்த செல்போன் ரத்தீஷுடையது என உறுதி செய்த பொலிசார் அவரிடம் இன்னொரு செல்போன் இருந்ததையும் கண்டுபிடித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் ரத்தீஷிடம் தீவிர நடைபெற்று வரும் நிலையில் விசாரணை முடிவில் மேலும் பல தகவல்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்