நாம் தமிழர் கட்சி தம்பியின் செயலால் நாம் பட்ட அவதி! திரும்பி அதை செய்யாதீர்கள்... வேதனைப்பட்ட சீமான்

Report Print Raju Raju in இந்தியா

மராட்டியரான ரஜினி படம் எடுத்து வந்து ஆட்சியைப் பிடிக்க நினைப்பதாக குற்றஞ்சாட்டிய சீமான் தமிழர்களின் தெய்வமான பார்வதி, சிவன், முருகன் ஆகியோர் வெவ்வேறு கால கட்டத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நாம் தமிழர் கட்சியின் இணையதள பாசறை கூட்டம் நடைபெற்ற நிலையில் அதில் கலந்து கொண்டு கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார்.

அவர் கூறுகையில், மராட்டிய சரபோஜி மன்னர்கள் படையெடுத்து வந்து தமிழர்களை வென்றது போல, மராட்டியரான ரஜினி படம் எடுத்து வந்து ஆட்சியைப் பிடிக்க நினைக்கிறார் என கூறினார்.

தமிழர்களின் தெய்வமாக பார்க்கப்பட்ட கொற்றவை தான் பார்வதி என்றும் சிவனும், முருகனும் வேறு வேறு காலகட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்களை தந்தை மகன் என்று திரைக்கதை எழுதி தமிழர்கள் நம்ப வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்

தமிழகத்தில் இட ஒதுக்கீட்டுக்காக தற்போது யாதவர் என போட்டுக் கொள்பவர்கள், நாம் தமிழர் ஆட்சியில் கோனார் என்று போட்டுக் கொண்டால்தான் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்றார்.

மேலும் அவர் பேசுகையில், தலித்துகளைப் பற்றி பேஸ்புக்கில் இழிவாக பதிவிட்ட தம்பி ஒருவரால், நான் கடும் அவதியுற்றேன் என வேதனைப்பட்டார்.

நாம் தமிழர் கட்சியை பார்த்து குரைக்கும் நாய்களுக்கு பதில் அளிப்பதாக நினைத்து தம்பிகள் திருப்பி குனிந்து நின்று குரைக்கக் கூடாது.

விடுதலைபுலிகள் தலைவர் பிரபாகரன் படிக்கிற காலத்தில் நடந்ததாக, தன்னிடம் சொன்ன ரகசியம் ஒன்றையும் அந்த கூட்டத்தில் சீமான் பகிர்ந்து கொண்டார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்