கதறி அழுதேன்... கெஞ்சினேன்! உயிர் பிச்சை கேட்ட இஸ்லாமியரை தாக்கிய டெல்லி கலவர கும்பல்

Report Print Santhan in இந்தியா

டெல்லியில் போராட்டத்தின் போது, இஸ்லாமியர் ஒருவர் மிகவும் மோசமாக தாக்கப்பட்டிருந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலான நிலையில், அன்று என்ன நடந்தது என்பதை பாதிக்கப்பட்ட நபர் கூறியுள்ளார்.

இந்தியாவின் தலைநகர் டெல்லியில் சிஏஏவுக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது. ஆரம்பத்தில் இந்த போராட்டத்தை கண்டுகொள்ளாததால், இப்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.

இதனால் டெல்லி போராட்டகளமாக காட்சியளிக்கிறது. குறிப்பாக இந்த கலவரத்தில் இஸ்லாமியர்கள் அதிகம் தாக்கப்படுகின்றனர்.

இஸ்லாமியர்களின் கடைகள் அதிகம் குறி வைத்து தாக்கப்படுவதும், கொளுத்தப்படுவதுமாக உள்ளது. தற்போது வரை இந்த கலவரம் காரணமாக 16-க்கும் அதிகமான இஸ்லாமியர்கள் பலியாகியுள்ளனர்.

இதற்கான வீடியோ மற்றும் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி பார்ப்போரை அதிர்ச்சியடைய வைத்தது. அதிலும் குறிப்பாக கலவரத்தின் போது, இஸ்லாமிய நபர் ஒருவரை கலவரக்காரர்கள் சிலர் சுற்றி நின்று தாக்குவதும், அவர் உயிர் பிச்சை கேட்டு கெஞ்சுவதும் போன்று இருந்தது.

இந்த புகைப்படத்தை ராய்டர்ஸ் பத்திரிக்கையாளர் டேனிஷ் சித்திக் (REUTERS - Danish Siddiqui) என்பவர் எடுத்திருந்தார்.

கலவரக்காரர்கள் தாக்கிய நபரின் பெயர் முகமது ஸுபைர் எனவும், உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த இவர் டெல்லியில் வசித்து வந்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.

அவர் இந்த கொடூர சம்பவம் குறித்து கூறுகையில், நான் அப்போது தொழுதுவிட்டு கடைக்கு சென்று கொண்டு இருந்தேன்.

அங்கு என் குழந்தைகளுக்கு உணவு வாங்கி சென்றேன். அப்போது திடீர் என்று ஒரு கும்பல் என்னை சுற்றி வளைத்தது. அவர்கள் என்னை பேச கூட வில்லை.

என்னுடைய தோற்றத்தை பார்த்ததும் என்னை மோசமாக தாக்கினார்கள். பாஜக தலைவர் கபில் மிஸ்ரா பெயரை சொல்லி சொல்லி தாக்கினார்கள். நான் அவர்களிடம் கெஞ்சினேன். என்னுடைய எலும்புகள் முறிந்தது.

என்னை விட்டுவிடுங்கள் என்று கதறி அழுதேன். நான் சுய நினைவை இழக்கும் வரை என்னை தாக்கினார்கள். அதன்பின் எனக்கு எதுவும் நினைவு இல்லை.

என் மதத்தை குறித்து மீண்டும் மீண்டும் சொல்லி, அவர்கள் என்னை தாக்கினார்கள். அதன்பின் நான் மருத்துவமனையில்தான் கண் விழித்தேன், என்று கூறியுள்ளார்.

இந்த கொடூரமான தாக்குதலின் காரணமாக முகமது ஸுபைர்ன் கால், கை எலும்புகள் உடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்