மூச்சு திணறலால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளைஞன்! ஸ்கேன் ரிப்போர்ட்டில் மருத்துவர்கள் கண்ட காட்சி

Report Print Santhan in இந்தியா

இந்தியாவில் மன நலம் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் திடீரென்று பூட்டினை விழுங்கிவிட்டதால், மருத்துவர்கள் சுமார் நான்கு மணி நேர அறுவை சிகிச்சைக்கு பின் நீக்கியுள்ளனர்.

ஜார்கண்டின், ராஞ்சியை சேர்ந்தவர் Jitendra Jumar. 22 வயதான இவர் மன நலம் சரியில்லாதவர் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் கவனிக்காமல் இருந்த போது, இவர் திடீரென்று பூட்டினை விழுங்கியுள்ளார். இதனால் அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது.

உடனடியாக ராஞ்சியில் இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அப்போது மருத்துவர்கள் முதலில் ஸ்கேன் செய்து பார்க்க வேண்டும், அப்போது தான் பூட்டு எங்கிருக்கிறது என்பதை அறிய முடியும், அதன் பின் சிகிச்சை முடிவு செய்யப்படும் என்று கூறியுள்ளனர்.

இதையடுத்து ஸ்கேன் ரிப்போர்ட்டில் பூட்டானது, தொண்டையில் அடைத்துள்ளது. அது உணவுகள் செல்லும் வழி என்பதால் மூச்சு விடவும் சிரமமாக இருந்திருக்கிறது.

உடனடியாக எண்டாஸ் கோப்பி மூலம் வெளியேற்றலாம் என்று நினைத்துள்ளனர். ஆனால் அது பலனளிக்காது என்பதால் திறந்த அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்துள்ளனர்.

அதன் படி சுமார் 4 மணி நேரம் நடந்த அறுவை சிகிச்சையில், பூட்டு வெளியே எடுக்கப்பட்டுள்ளது. குறித்த இளைஞனும் பத்திரமாக உள்ளான். இருப்பினும் சுமார் 10 முதல் 12 நாட்கள் தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்பதால், Jitendra Jumar தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்