சபாஷ்... அப்படி வாங்க ரஜினி: மறைமுகமாக புகழ்ந்து தள்ளிய நடிகர் கமல்

Report Print Santhan in இந்தியா

மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், நடிகருமான கமல், சபாஷ், அப்படி வாங்க ரஜினி என்று புகழ்ந்து தள்ளியுள்ளார்.

டெல்லியில் நடக்கும் கலவரம் குறித்து நடிகர் ரஜினி பேசினார். அப்போது அவர் டெல்லியில் தற்போது வரை நடக்கும் வன்முறைக்கு உளவுத்துறையின் தோல்வியே காரணம். இந்த போராட்டங்களை மத்திய அரசு இரும்பு கரம் கொண்டு தடுக்க வேண்டும்.

இதன் காரணமாக மத்திய அரசை வன்மையாக கண்டிக்கிறேன் என்று கூறியிருந்தார். இதனால் ரஜினி பாஜக-வின் கையால், அவர் சுற்றிவிடும் பம்பரம் என்றெல்லாம் கூறப்பட்டது. அதற்கு எல்லாம் பதிலடி கொடுக்கும் வகையில் ரஜினி பேசினார்.

இந்நிலையில் நடிகர் கமல் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், சபாஷ் நண்பர் ரஜினி,அவர்களே, அப்படி வாங்க. இந்த வழி நல்ல வழி. தனி வழி அல்ல, ஒரு இனமே நடக்கும் ராஜ பாட்டை. வருக, வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

இவர் எதற்காக இந்த வாழ்த்தை கூறுகிறார்? என்பது இணையவாசிகளுக்கு புரியவில்லை. ஏனெனில் கமலின் தயாரிப்பில், ரஜினி நடிக்கவுள்ளார். இதனால் அதற்கு இந்த வாழ்த்தா? இல்லை இன்று அவர் மத்திய அரசை கண்டித்து பேசினாரே? அதற்கு இந்த வாழ்த்தா என்பது அவர் சொன்னால் மட்டுமே தெரியும்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்