சில தினங்களில் திருமணம் நடக்கவிருந்த நிலையில் தற்கொலை செய்துகொண்ட பெண் மருத்துவர்!

Report Print Vijay Amburore in இந்தியா

சில தினங்களில் திருமணம் நடக்கவிருந்த நிலையில் இளம்பெண் மருத்துவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மத்திய பிரதேச மாநிலத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த ஷாஹ்தாப் ஷிரின் முகமது அகேஃப் என்கிற 28 வயதான பெண் மருத்துவர், சதாப் அரசு புற்றுநோய் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தார்.

இவருக்கு அடுத்த மாதம் 7ம் திகதியன்று திருமணத்திற்கு நிச்சயிக்கப்பட்டிருந்தது. திருமண பத்திரிக்கையானது அச்சடிக்கப்பட்டு அவருடைய பெற்றோர், உறவினர்கள் அனைவருக்கும் கொடுத்து வந்தனர்.

இந்த நிலையில் அவர் வீட்டில் ஆள் இல்லாத சமயம் பார்த்து தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவருடைய பெற்றோர் பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், ஷாஹ்தாபின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் அவருடைய வீட்டில் தீவிர சோதனை மேற்கொண்டனர். ஆனால் தற்கொலைக்கான குறிப்புக்கள் எதுவும் அங்கு கிடைக்கவில்லை.

இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், பொலிஸார் அவருடைய பெற்றோர் உறவினர்கள் அனைவரிடமும் விசாரணை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...