6 கொலைகள் செய்த குற்றவாளி ஜோலி ஜோசப், சிறையில் தற்கொலை செய்ய முயற்சித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் கோழிகோடு மாவட்டத்தில் கூடத்தை பகுதியை சேர்ந்த ஜோலி ஜோசப் 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 6கொலைகள் செய்ததாக கைது செய்யப்பட்டார்.
பொலிசாரின் கூற்றப்படி இவர், 14ஆண்டுகளாக தனது குடும்ப உறுப்பினர்கள் 6பேரை சொத்துக்காக கொலை செய்துள்ளார்.
அந்த குடும்பத்தில் இறந்த ரோய் என்பவர் மரணத்தில் நீடித்த சந்தேகத்தால் 2019ஆம் ஆண்டு இச்சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.
நாடுமுழுவதும் பெருமளவில் பேசப்பட்ட நிலையில், ஜோலி இதில் தான் தான் குற்றவாளி என்பதை ஒப்புக்கொண்டிருந்தார்.
இந்நிலையில் இன்று, ஜோலி சிறையில் கை மணிக்கட்டை அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அதை அறிந்த சிறைதுறை அதிகாரிகள் அவரை மீட்டு கோழிகோடு அரசு பொது மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
மேலும், அவரிடம் எப்படி கூர்மையான ஆயுதம் சிக்கியது உள்ளிட்ட பல தகவல்களை பொலிசார் தற்போது விசாரித்து வருகின்றனர்.