119 இந்தியர்கள் கொரோனாவில் இருந்து தப்பி நாடு திரும்பினர்! இலங்கை உள்ளிட்ட 5வெளிநாட்டினரையும் மீட்ட இந்தியா

Report Print Abisha in இந்தியா

கொரோனா பாதிப்பால் கடலில் நிறுத்தப்பட்டிருந்த டைமண்ட் பிரின்சஸ் கப்பலில் இருந்து 119 இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினர் நாடு திரும்பியுள்ளனர்.

கொரோனா வைரஸ் காரணமாக இந்தியர்கள் 138 உள்ளிட்ட 3,711 பேர் பயணித்த டைமண் பிரின்சஸ் கப்பல் யோகஹாமா கடலில் நிறுத்தி வைக்கப்பட்டது.

இதனால், பெரும் அதிர்ச்சியடைந்த பயணிகள் தங்கள் சொந்த நாட்டு அரசு மீட்க கோரிக்கை விடுத்தனர். அதன்படி இந்தியர்கள், பிரதமர் மோடிக்கு பலகட்டமாக வீடியோக்களை வெளியிட்டு கோரிக்கை முன்வைத்தனர்.

இந்நிலையில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அதற்கான முயற்சிகள் மேற்கொண்டு வந்தார். ஆனால், இடையில் அந்த கப்பலில் உள்ள பயணிகளுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 3இந்தியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டது.

இதனால், அந்த கப்பலில் உள்ளவர்கள் வெளியேற சிக்கல் ஏற்பட்டது. தொடர்ந்து அமைச்சரின் முயற்சியால் 119 இந்தியர்கள் மற்றும் இலங்கை உள்ளிட்ட 5 வெளிநாட்டினர் இந்தியா வந்தடைந்துள்ளனர்.

இதை வெளியுறவுதுறை அமைச்சர் உறுதி செய்து டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்