மகனின் சடலத்தை வாங்க பிணவறையில் காத்திருக்கும் தாய்! திருமணமான 11 நாட்களிலே நடந்த துயரம்

Report Print Santhan in இந்தியா

டெல்லி வன்முறையில் மகனை பறிகொடுத்த தாய், நான் என் மருமகளிடம் என்ன சொல்லி சமாளிக்கப்போகிறேன் என்பதே தெரியவில்லை என்று கதறி அழுதுள்ளார்.

இந்தியாவின் தலைநகர் டெல்லியில் சிஏஏவிற்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டம் கலவரமாக மாறியதால் தற்போது வரை 30 பேர் பலியாகியுள்ளனர்.

கலவரத்தை கட்டுப்படுத்த தவறிய பாஜக கட்சியின் முக்கிய அதிகாரிகள், குறிப்பாக அமித் ஷா பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்து வருகிறது. நடிகர் ரஜினி மத்திய அரசை கண்டிப்பதாக தெரிவித்தார்.

இந்நிலையில் இந்த கலவரத்தில் உயிரிழந்தவர்களின் உடலை வாங்குவதற்காக கிழக்கு டெல்லியில் உள்ள குரு தேஜ் பகதூர் மருத்துவமனையின் பிணவறை முன்பு கண்ணீருடனும் கதறலுடனும் உறவினர்கள் பலர் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவை விட, பிணவறை முன்பே மக்களின் கூட்டம் அதிகமாக இருக்கிறது. ஏனெனில் குறித்த கலவரத்தில் கொல்லப்பட்ட 10 முதல் 15 பேரின் உடல்கள் அங்கு இருப்பதாக உறுதிப்படுத்தப்படாத தகவல் வெளியானதால், அங்கு உறவினர்கள் குவிந்திருக்கின்றனர்.

இதில், தந்தையை இழந்த இந்து ஆண் ஒருவரும், இஸ்லாமிய தாய் ஒருவரும் கண்ணீருடன் பிணவறையில் வெளியே அமர்ந்திருந்தனர்.

தாய் ஹஸ்ரா

இதில் கண்ணீருடன் நின்று கொண்டிருந்த தாயிடம் பிரபல ஊடமகான பிபிசி இது குறித்து கேட்ட போது, நாங்கள் அவனை இத்தனை ஆண்டுகளாக வளர்த்தோம்.

அவர்கள் என் மகனை கொன்று விட்டார்கள், என்று கதறி அழுதுள்ளார்.

வடகிழக்கு டெல்லியின் பழைய முஸ்தபாபாத் பகுதியைச் சேர்ந்தவர் தாய் ஹஸ்ரா. இவருடைய 24 வயதான மகன் அஷ்பக் ஹுசேனுக்கு காதலர் தினமான பிப்ரவரி 14-ஆம் திகதி திருமணம் நடைபெற்றுள்ளது.

இந்நிலையில் தான் சம்பவம் தினம் அன்று ஐந்து துப்பாக்கி குண்டுகள் அஷ்பக்கின் உடலில் பாய்ந்தன. அவற்றில் மூன்று குண்டுகள் அவனது நெஞ்சில் பாய்ந்ததால் உயிரிழந்துவிட்டதாக உறவினர் சலீம் பைக் தெரிவித்துள்ளார்.

முதலில் அல் ஹிந்த் மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த அவரது உடல் உடற்கூறாய்வுக்காக ஜி.டி.பி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

எலக்ட்ரீசியனாக பணியாற்றும் அஷ்பக் ஹுசேன் பிப்ரவரி 25-ஆம் திகதி மாலை முஸ்தபாபாத் பகுதியில் நடந்த வன்முறையில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

என் மருமகளுக்கு நான் என்ன பதில் சொல்வது, அவளின் எதிர்காலம் என்னாவது என்று அழுதுகொண்டே கேள்வி எழுப்பினார். ஆனால் அவரின் கேள்விக்கு எந்த ஒரு பதிலும் இல்லை என்பது தான் வேதனையான பதில்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...