டெல்லியில் ஆம் ஆத்மி கவுன்சிலர் வீட்டு மாடியிலிருந்து பெட்ரோல் குண்டுகள் கண்டெடுப்பு! வெளியான ஆதாரம்

Report Print Basu in இந்தியா

டெல்லி இடம்பெற்ற வன்முறையின் போது ஆம் ஆத்மி கவுன்சிலர் வீட்டு மாடியிலிருந்து பெட்ரோல் குண்டுகள் மற்றும் கற்கள் வீசப்பட்டு அக்கம் பக்கத்தில் உள்ள வீடுகள் சேதப்படுத்தப்பட்ட சம்பவம் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

கஜில் மிஸ்ரா, அமித் மால்வியா போன்ற பல பாஜக தலைவர்கள் பகிர்ந்த வீடியோக்களில், கஜூரி காஸில் உள்ள ஆம் ஆத்மி கட்சி கவுன்சிலர் வீட்டின் மாடியிலிருந்த மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகள் மற்றும் கற்களை வீசி அக்கம் பக்கத்தில் அழிவை ஏற்படுத்துவதைக் காணலாம்.

மேலும், குறித்த கவுன்சிலரின் ஆட்கள் தனது மகனை கொன்று சாக்கடையில் வீசியதாக கொல்லப்பட்ட உளவுத்துறை அதிகாரியின் தந்தையும் குற்றம்சாட்டினார்.

இதுகுறித்து விளக்கமளித்து ஆம் ஆத்மி கவுன்சிலர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இது எனக்கு எதிரான ஒரு மோசமான பிரசாரம், சிலர் கேவலமான அரசியலில் ஈடுபட்டுள்ளனர்.

பெரிய கும்பல் என் அலுவலகத்திற்குள் நுழைந்தது. நான் பலமுறை காவல்துறையினரிடம் உதவி கோரினேன். அவர்கள் பல மணிநேரங்களுக்குப் பிறகு சம்பவயிடத்திற்கு வந்தனர்.

பொலிசார் கட்டிடத்தை காலி செய்து, முழு கட்டிடத்தையும் சோதனை செய்தனர். பின்னர் அங்கிருந்து என்னையும் எனது குடும்பத்தினரையும் மீட்டனர்.

கும்பல் மீண்டும் கட்டிடத்திற்குள் நுழைந்து தாக்குதலில் ஈடுபடும் என்பதால் பொலிஸ் படையை கட்டிடத்திலிருந்து அகற்ற வேண்டாம் என்று நான் அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டேன்.

அப்போதும் படைகள் கட்டிடத்திலிருந்து அகற்றப்பட்டன, ஏன் படைகள் அங்கிருந்து அகற்றப்பட்டன என்று தெரிய வேண்டும் என கோரியுள்ளார்.

இந்நிலையில், ஆம் ஆத்மி கவுன்சிலர் வீட்டின் மாடியிலிருந்து பெட்ரோல் குண்டுகள் மற்றும் கற்கள் கண்டறியப்பட்ட சம்பவம் மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி வன்முறையில் இறந்தவர்களின் எண்ணிக்கை புதன்கிழமை காலை 34-ஐ தொட்டது. இறந்தவர்களில் டெல்லி பொலிஸ் கான்ஸ்டபிள் மற்றும் உளவுத்துறை டிரைவர் ஆகியோர் அடங்குவர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்