நள்ளிரவில் ரகசியமாக காதலியை சந்திக்க இளைஞர் செய்த அதிர்ச்சி காரியம்: பரபரப்பான கிராமம்

Report Print Vijay Amburore in இந்தியா

காதலியை சந்திப்பதற்காக மாங்காய் குடோனில் பெட்ரோல் குண்டு வீசிய இளைஞரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் அழகர் பொட்டல் குடியிருப்புப் பகுதியில் உள்ள மாங்காய் குடோனில் நேற்று நள்ளிரவு திடீரென தீ பற்றி எரிந்துள்ளது.

இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அனைத்து முடித்த பின்னர், பெட்ரோல் குண்டு வீசப்பட்டிருப்பதை கண்டறிந்து பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர்.

இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட பொலிஸார், அருகாமையில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் இருந்து வாலிபர் ஒருவர் பாட்டிலில் பெட்ரோல் வாங்கிக்கொண்டு குடியிருப்பு பகுதியை நோக்கி செல்வதை சிசிடிவியின் மூலம் கண்டறிந்தனர்.

பின்னர் அந்த நபரை கைது செய்து விசாரணை மேற்கொண்ட போது அவர் கூறியதை கேட்டு பொலிஸாரே அதிர்ச்சியடைந்துள்ளனர்.

அய்யம்பாளையம் பகுதியைச் சேர்ந்த கொத்தனார் ராஜாங்கம் என்பவர் தனது காதலியை சந்திக்கும் போது யாரும் பார்த்து விடக்கூடாது, அவர்களை திசைதிருப்ப வேண்டும் என்கிற நோக்கத்திலே பெட்ரோல் குண்டு வீசியதாக கூறியுள்ளார்.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த பொலிஸார், ராஜாங்கத்தை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்