மோடி பலரை கொன்ற கொலைகாரன் என பேஸ்புக்கில் பதிவிட்ட கல்லூரி பேராசிரியருக்கு நேர்ந்த கதி!

Report Print Basu in இந்தியா

டெல்லி கலவரம் குறித்து பிரதமர் மோடியை விமர்சித்து பேஸ்புக்கில் பதிவிட்ட கல்லூரி பேராசிரியர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

அசாமின் சில்சார் நகரில் உள்ள குர்ச்சரன் கல்லூரியில் பணிபுரிந்த பேராசரியர் சௌர்தீப் சென்குப்தாவே கைது செய்யப்பட்டுள்ளார்.

அண்மையில் சென்குப்தா தனது பேஸ்புக் பதிவில் பிரதமர் நரேந்திர மோடியை பலரை கொன்ற கொலைகாரன் என அழைத்தார்.

இது தவிர, வடகிழக்கு டெல்லியில் திங்களன்று வெடித்த இனக் கலவரத்தின்போது மத பதட்டங்களைத் தூண்டும் கோஷங்கள் எழுப்பப்பட்டதாகவும் அவர் கூறியிருந்தார்.

தனது பேஸ்புக் பதிவில், பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் டெல்லியில் 2002 குஜராத் கோத்ரா கலவரத்தை மீண்டும் உருவாக்க முயற்சிப்பதாக சென்குப்தா குற்றம் சாட்டினார். மற்ற கூற்றுக்களைத் தவிர, டெல்லியில் உள்ள மக்கள் தங்கள் மதத்தின் காரணமாக இரக்கமின்றி தாக்கப்படுகிறார்கள் என்றும் சென்குப்தா குற்றம் சாட்டினார்.

அவரது பேஸ்புக் பதிவைத் தொடர்ந்து, குர்ச்சரன் கல்லூரியில் சில மாணவர்கள் செங்குப்தா மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்தனர்.

வெள்ளிக்கிழமை, சென்குப்தா பேஸ்புக்கில் மற்றொரு பதிவிட்டார். அதில், மோடி குறித்த தனது முந்தையை பதிவிற்கு மன்னிப்பு கேட்டார்.

எனது பதிவால் நான் புண்படுத்தியிருக்கக்கூடிய எந்தவொரு மத உணர்வுகளுக்கும் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். வகுப்புவாத முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினை குறித்து நான் பொறுப்பற்ற சில கருத்துக்களை தெரிவித்தேன்.எந்தவொரு மதத்தையும் பெரிய அளவில் அவமதிக்கக்கூடாது என்பதே எனது நோக்கம் என்று அவர் எழுதினார்.

indiatoday

பொலிஸில் மாணவர்கள் அளித்த புகாரில், குருச்சரன் கல்லூரியின் இயற்பியல் துறையில் விருந்தினர் பேராசியராக இருக்கும் சென்குப்தா ஒரு கேவலமான கருத்துக்களை வெளியிட்டு சனாதன் தர்மத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

நாட்டின் பிரதமர் பலரை கொன்ற கொலைகாரன் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். சென்குப்தா வகுப்புவாத வன்முறையைத் தூண்ட முயன்றார் என கூறியுள்ளனர்..

எப்.ஐ.ஆர் மீது செயல்பட்ட மாவட்ட காவல்துறையினர், செங்குப்தாவை வெள்ளிக்கிழமை இரவு சில்சார் இட்டகோலா பகுதியில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்தனர்.

அவர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் 295 (ஏ), 153 (ஏ), 507 மற்றும் ஐடி சட்டத்தின் 66 வது பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...