பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரிகளுடன் சேர்ந்து உளவு பார்த்த இலங்கை தமிழருக்கு 5 ஆண்டுகள் சிறை! முழு விபரம்

Report Print Raju Raju in இந்தியா

இந்தியாவில் தீவிரவாத செயல்களை செய்வதற்கான சதித்திட்டத்தின் ஒரு பகுதியாக பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரிகளின் உத்தரவின் பேரில் உளவு பார்த்த இலங்கை தமிழருக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

A National Investigation Agency-ன் சிறப்பு நீதிமன்றம் தான் இத்தீர்ப்பை வழங்கியுள்ளது.

இந்த வழக்கானது கடந்த 2010ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் திகதி முதன் முதலில் பதியப்பட்டது.

தமிழகத்தின் தஞ்சாவூரை சேர்ந்த தமீம் அன்சாரி என்பவர் இந்தியாவில் பயங்கரவாத செயல்களைச் செய்வதற்கான சதித்திட்டத்தின் ஒரு பகுதியாக கொழும்பில் உள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தில் குற்றவாளி அமீர் ஜுபைர் சித்திக் தலைமையிலான பாகிஸ்தான் புலனாய்வு அதிகாரிகளின் உத்தரவின் பேரில் உளவு பார்க்கும் பணியில் ஈடுபட்டார்.

இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். பின்னர் இலங்கை தமிழரான அருண் செல்வராஜன் என்பவரும் பாகிஸ்தான் புலனாய்வு அதிகாரிகளின் உத்தரவின் பேரில் இதே போன்ற உளவு நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டார்.

பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரிகளுடன் சேர்ந்து நடத்தப்பட்ட சதித்திட்டத்தைத் தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்ட நபர்களான தமீம் அன்சாரி மற்றும் அருண் செல்வராஜன் ஆகியோர் தமிழ்நாட்டின் பல்வேறு பாதுகாப்பு நிறுவனங்கள் மற்றும் முக்கிய இடங்களில் உளவு பார்த்ததது தெரியவந்தது.

இந்நிலையில் அருண் செல்வராஜன் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு அவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு தண்டனை விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி அவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ 20,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் தமிம் அன்சாரி மீதான வழக்கு விசாரணை தொடரவுள்ளது.

அதே போல இவ்வழக்கில் சம்மந்தப்பட்ட முகமது அன்வர் முகமது சிராஜ் தொடர்பில் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்