முதல் மனைவி சடலத்தை பார்த்து கதறி அழுத இராணுவ வீரர்! விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி உண்மை

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் இராணுவ வீரர் தனது முதல் மனைவியை குடும்பத்தோடு சேர்ந்து கொன்றுவிட்டு நாடகமாடிய நிலையில் அவரின் குட்டு வெளியாகியுள்ளது.

தேனி மாவட்டம் போடியை சேர்ந்தவர் முனீஸ்வரன். இராணுவ வீரர்.

இவருக்கு சுப்புலட்சுமிக்கும் ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்த நிலையில் தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

முனீஸ்வரன் இராணுவத்தில் வேலை செய்வதால் அவரது குடும்பத்தினரை தனது பெற்றோர் வீட்டில் தங்க வைத்தார். விடுமுறையில் ஊருக்கு வரும்போது மனைவி குழந்தைகளை சந்தித்து பேசி வந்தார்.

சமீபத்தில் முனீஸ்வரன் ஊருக்கு வந்திருந்த நிலையில் வீட்டில் இருந்த சுப்புலட்சுமி இரவு தூக்கில் தொங்கிய நிலையில் இறந்தார். தனது மனைவி குடும்ப பிரச்சனையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டதாக முனீஸ்வரன் கூறி சடலம் அருகில் கதறி அழுதார்.

இதுபற்றி போடி பொலிஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்துக்கு வந்து சுப்புலட்சுமியின் உடலை கைப்பற்றி பொலிசார் பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

இதனிடையில் சுப்புலட்சுமியின் சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது பெற்றோர் புகார் கூறினர்.

இதை தொடர்ந்து முனீஸ்வரன் குடும்பத்தினரை சந்தேகத்தின் அடிப்படையில் கண்காணிப்பில் வைத்திருந்தனர். இந்த நிலையில் சுப்புலட்சுமி உடல் பிரேத பரிசோதனையில் அவர் கழுத்தை இறுக்கி கொலை செய்யப்பட்ட அதிர்ச்சி தகவல் வெளியானது. இதை தொடர்ந்து முனீஸ்வரன் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் பொலிசார் துருவி துருவி விசாரணை நடத்தினார்கள்.

அப்போது சுப்புலட்சுமியை கொலை செய்ததை அவர்கள் ஒப்புக்கொண்டனர். முனீஸ்வரனுக்கும் வேறு ஒரு பெண்ணுக்கும் இடையே பழக்கம் இருந்தது. நாளடைவில் அந்த பெண்ணை முனீஸ்வரன் 2-வதாக திருமணம் செய்துகொண்டார். அந்த பெண் கர்ப்பமானார். இதை தொடர்ந்து அவருக்கு வளைகாப்பு நடத்த முனீஸ்வரன் மற்றும் அவரது குடும்பத்தினர் திட்டமிட்டனர்.

இந்த விவரம் அறிந்த சுப்புலட்சுமி கணவனை கண்டித்தார். மேலும் வளைகாப்பு நடத்தக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து தகராறில் ஈடுபட்டார். சம்பவத்தன்று இது தொடர்பாக அவர்களுக்கிடையே மீண்டும் தகராறு உண்டானது. இதில் ஆத்திரம் அடைந்த முனீஸ்வரன் சுப்புலட்சுமியை துண்டால் கழுத்தை இறுக்கி கொலை செய்தார். இதற்கு அவரது குடும்பத்தினர் உடந்தையாக இருந்துள்ளனர்.

பின்பு கொலையை மறைக்க சுப்புலட்சுமி உடலை தூக்கில் தொங்க விட்டு தற்கொலை செய்ததாக நாடகம் ஆடியுள்ளனர்.

இதை தொடர்ந்து பொலிசார் முனீஸ்வரனின் தந்தை ராஜூ (65), தாய் மாரியம்மாள்(55), சகோதரர்கள் சதீஷ்குமார், ராஜசேகரன், உறவினர் வக்கீல் பாலமுனீஸ், அன்னலட்சுமி ஆகிய 6 பேரை கைது செய்தனர்.

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான முனீஸ்வரன் தலைமறைவாக உள்ளார்.

கொலை செய்யப்பட்ட சுப்புலட்சுமியை முனீஸ்வரன் குடும்பத்தினர் கடந்த 2 ஆண்டுகளாக துன்புறுத்தி வந்துள்ளனர். முனீஸ்வரன் தொடர்ந்து குடும்பசெலவுக்கு பணம் அனுப்பாததால் சுப்புலட்சுமி 2 குழந்தைகளை காப்பாற்ற நூறுநாள் வேலை திட்டத்தில் பணிக்கு சென்று வந்துள்ளது தெரியவந்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்