வெளிநாட்டில் இருந்து வந்த 11 பேருக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனை! மருத்துவமனையில் இருந்து திடீரென தப்பியோட்டம்

Report Print Raju Raju in இந்தியா

இந்தியாவில் கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 11 பேர் அங்கிருந்து நைசாக தப்பி ஓட்டம் பிடித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளுக்கும் வேகமாக பரவி வருகிறது.

இந்தியாவில் இதுவரை 114 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தின் மும்பையில் கொரோனா அறிகுறிகளுடன் 11 பேர் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

விரைவில் அதன் முடிவுகள் வரவிருந்த நிலையில் அவர்கள் திடீரென மருத்துவமனையில் இருந்து தப்பியோடியுள்ளனர்.

11 பேருமே துபாய்க்கு கிரிக்கெட் போட்டிகளில் விளையாட சென்றுவிட்டு இந்தியாவுக்கு திரும்பியவர்கள் என தெரியவந்துள்ளது.

இந்தியாவுக்கு வந்த 2 மணி நேரத்தில் 11 பேரும் மருத்துவமனைக்கு அனுப்பட்டனர்.

இவர்களில் யாருக்காவது கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானால் அது மற்றவர்களுக்கும் பரவும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து அவர்களை தேடி கண்டுபிடிக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்