தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் மூடல்! முதல்வர் பழனிசாமி உத்தரவு

Report Print Basu in இந்தியா

கொரோனா எதிரொலி காரணமாக தமிழகத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்கள், அங்கன்வாடி மையங்கள், திரையரங்குகள், வணிக வளாகங்கள் அனைத்தையும் மார்ச் 31 வரை மூட , தமிழக முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் பரவுவதை தவிர்க்கும் வகையில் கேரளா, டெல்லி ஆகிய மாநிலங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அண்மையில் அனைத்து கல்வி நிறுவனங்கள், திரையரங்குகளையும் மார்ச் 31 வரை மூட உத்தரவிட்டது.

இதனைத்தொடர்ந்து, தமிழகம் மற்றும் புதுச்சேரி அரசுகள் எல்.கே.ஜி. முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள், சுகாதாரத் துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்துக்குப் பிறகு, தமிழகத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்கள், அங்கன்வாடி மையங்களையும் மார்ச் 31 வரை மூட உத்தரவிட்டுப்பட்டுள்ளது.

10, +2 அரசுத்தேர்வுகள் மற்றும் நுழைவுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும். மருத்துவ மற்றும் மருத்துவம் சார்ந்த கல்லூரிகள் மட்டும் தொடர்ந்து இயங்கும் என்று அறிவித்துள்ளார்.

அதே போல , கொரோனா எதிரொலி காரணமாக தமிழகத்தில் திரையரங்குகள், வணிக வளாகங்கள் அனைத்தையும் மார்ச் 31 வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், திருமண மண்டபங்களில் திட்டமிட்ட நிகழ்வுகளை தவிர புதிய நிகழ்வுகளை நடத்த வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா எதிரொலி காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா செல்ல மக்கள் திட்டமிட வேண்டாம் என்றும் கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகளில் கூட்டம் கூடுவதை தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்