திருமணமான 4வது நாள் தூக்கில் தொங்கிய புதுப்பெண்! வீட்டுக்குள் நுழைந்த கணவர் கண்முன்னர் நடந்த சம்பவம்

Report Print Raju Raju in இந்தியா
542Shares

தமிழகத்தில் கணவர் கண்முன்னர் திருமணமான 4 நாட்களில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை அரசரடியை சேர்ந்தவர் மணிகண்டன் (37). இவருக்கும், தேனியை சேர்ந்த தவச்செல்வி (31) என்பவருக்கும் கடந்த 12ம் திகதி திருமணம் நடந்தது. தவச்செல்வி, தேனியில் உள்ள தமிழ்நாடு தொழில் கூட்டுறவு வங்கியில் காசாளராக வேலை பார்த்து வந்தார்.

திருமணத்தை தொடர்ந்து மணிகண்டன், தவச்செல்வி ஆகியோர் ஆதிப்பட்டியில் வசித்து வந்தனர்.

திருமணமான 4-வது நாளான நேற்று முன்தினம், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தவச்செல்வி தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். அந்த நேரத்தில் வெளியில் சென்றிருந்த மணிகண்டன் வீட்டுக்குள் நுழைந்தார்.

அப்போது மனைவி தற்கொலைக்கு முயல்வதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் தவச்செல்வியை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

இதையடுத்து தவச்செல்வி மேல்சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து பொலிசில் மணிகண்டன் ஒரு புகார் மனு அளித்தார்.

அதில், வங்கியில் வேலைப்பளு அதிகம் இருப்பதாக தவச்செல்வி கூறி வந்ததாகவும், அதற்கு தான் ஆறுதல் கூறி வந்ததாகவும் குறிப்பிட்டிருந்தார். அந்த புகாரின் பேரில் பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்