ரூபாய் நோட்டுகள் மூலமாகவும் கொரோனா பரவக்கூடும்! எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்

Report Print Raju Raju in இந்தியா

கொரோனா வைரஸ் ரூபாய் நோட்டுகள் மூலமாகவும் பரவக்கூடும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மக்கள் சுய சுத்தத்தை கடைபிடிப்பது அவசியம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

இது குறித்து பேசிய தமிழகத்தை சேர்ந்த மருத்துவர் ராமசுப்பிரமணியன், பொது இடங்களில் லிஃப்ட்கள், தொலைபேசிகள், கதவுகள் போன்றவற்றை மிகுந்த கவனத்துடன் கையாள வேண்டும்.

குறிப்பாக வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ நாம் கதவுகளை திறக்கும்போது, உள்ளங்கை விரல்களை தவிர்த்து, முழங்கைகளை வைத்து திறக்க வேண்டும் என்றார்.

நுரையீரல் சிகிச்சை நிபுணர் பிரசன்ன குமார் தாமஸ் கூறுகையில், கொரோனா அறிகுறிகளாக நாம் காய்ச்சல், சளி, இருமல் போன்றவறை குறிப்பிடுகிறோம்.

ஆனால் ஆஸ்துமா போன்ற பாதிப்பு உடையவர்களுக்கு இருமல், சளி என்பவை பொதுவாகவே இருக்கும். எனவே அவர்கள் இருமல் சளி போன்றவை ஏற்படும்போது, இது எப்போதும் வரக்கூடியதுதானே என்று அலட்சியம் செய்யாமல் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என கூறினார்.

மேலும் ரூபாய் நோட்டுகள் மூலமாகவும் கொரோனா வைரஸ் பரவக்கூடு‌ம் என்று‌ எச்சரித்த மருத்துவர்க‌ள், பண நோட்டுகளையும் நாணயங்களையும் கையாண்ட பிறகு கைகளை நன்றாக கழுவ வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்