விதவையாக வாழ விரும்பல! நிர்பயா குற்றவாளிக்கு நாளை மறுநாள் தூக்கு என்ற நிலையில் மனைவியின் கோரிக்கை

Report Print Raju Raju in இந்தியா

விதவையாக வாழ விரும்பவில்லை எனவும் தூக்கிலிடும் முன்பே விவாகரத்து வழங்குமாறும் நிர்பயா குற்றவாளிகளில் ஒருவரான அக்‏ஷய் குமார் சிங்கின் மனைவி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

பீகார் மாநிலம் ஔரங்காபாத்தில் உள்ள கீழ் நீதிமன்றத்தில் விவாகரத்துக் கேட்டு மனு தாக்கல் செய்திருப்பதும், நிர்பயா குற்றவாளிகளை தூக்கிலிடுவதில் இருந்து தள்ளி வைக்க மேற்கொள்ளப்படும் சதியாகவே பார்க்கப்படுகிறது.

நிர்பயா குற்றவாளிகளை மார்ச் 20-ஆம் திகதி காலை 5.30 மணிக்கு தூக்கிலிட தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அவர்களைத் தூக்கிலிடுவதற்கு சிறையில் நேற்று ஒத்திகைப் பார்க்கப்பட்டது.

இந்த நிலையில், நிர்பயா குற்றவாளிகளில் ஒருவரான அக்‏ஷய் குமாரின் மனைவி தாக்கல் செய்த விவாகரத்து கோரும் மனுவில், ஒரு விதவையாக வாழ தான் விரும்பவில்லை. எனவே, மார்ச் 20ம் திகதி அக்‏ஷய் குமாரை தூக்கிலிடுவதற்கு முன்பு எனக்கு விவாகரத்து வழங்குமாறு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த மனுவை மார்ச் 19ம் திகதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

இது குறித்து அக்‏ஷய் குமாரின் மனைவி புனிதா கூறுகையில், எனது கணவர் நிரபராதி. அவரை தூக்கிலிடும் முன்பு எனக்கு விவாகரத்து வழங்க வேண்டும் என கூறியுள்ளார்.

தில்லியில் கடந்த 2012-இல் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை செய்யப்பட்ட வழக்கில் முகேஷ் குமார் சிங் (22), பவன் குமார் குப்தா (25), வினய் சர்மா (26), அக்ஷய் குமார் சிங் (31) ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்