தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆக உயர்வு!

Report Print Vijay Amburore in இந்தியா

கொரோனா வைரஸ் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் 2 ஆக அதிகரித்துள்ளது.

உலகெங்கிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்க கூடிய கோவிட் -19 கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு தற்போதுவரை 8,250 பேர் உயிரிழந்திருப்பதோடு, 204,000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனை கட்டுப்படுத்துவதற்காக உலகநாடுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருப்பதோடு, தடுப்பூசி கண்டுபிடிக்கும் வேலையில் நிபுணர்களும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். சீனாவில் இதன் தாக்கம் குறைந்திருந்தாலும், மற்ற நாடுகளை விட ஐரோப்பாவில் தீவிரமாக பரவி வருகிறது.

இதற்கு இந்தியாவில் 152 பேர் பாதிக்கப்பட்டிருப்பதோடு, 3 பேர் பலியாகியுள்ளனர். அதில் தமிழகத்திலிருந்து ஒருவர் மட்டுமே பாதிப்புக்குள்ளாகியிருந்த நிலையில், தற்போது மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

பாதிப்புக்குள்ளான அந்த நபர் டெல்லியிலிருந்து ரயில் மூலம் சென்னை வந்தடைந்ததாகவும், அவர் தற்போது நல்ல நிலைமையில் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்