நிர்பயா குற்றவாளிகளை தூக்குக்கு அழைத்து சென்ற பெண் வழக்கறிஞர் இவர் தான்! குவியும் பாராட்டுகள்

Report Print Santhan in இந்தியா

நிர்பயா குற்றவாளிகள் இன்று தூக்கிலிடப்பட்டதை நாட்டு மக்களே கொண்டாடி வரும் நிலையில், அதற்காக போராடிய பெண் வழக்கறிஞரையும் மக்கள் பாராட்டி வருகின்றனர்.

டெல்லி மாணவி(நிர்பயா) பாலியல் பலாத்கார வழக்கில் குற்றவாளிகள் நான்கு பேரும், இன்று அதிகாலை தூக்கிலிடப்பட்டனர்.

7 வருட சட்ட போராட்டத்திற்கு பின் கிடைத்த நீதி, இது எனக்கான நீதி அல்ல, ஒட்டு மொத்த தேசத்துக்குமான நீதி, எனது நாடு எனக்கு நீதியை பெற்று தந்துள்ளது என்று நிர்பயாவின் தாயார் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றிய பின் கண்ணீர்மல்க தெரிவித்தார்.

இந்நிலையில் நிர்பயாவுக்காக, நீதிமன்றத்தில் கடந்த பல ஆண்டுகளாக வாதாடி வந்து, தற்போது குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைப்பதற்கு முக்கிய காரணமாக இருந்த நிர்பயாவின் வழக்கறிஞரான Seema Samridhi Kushwaha-வை இந்திய மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

ஒரு போதும் நம்பிக்கையை இழக்காமல், தொடர்ந்து போராடி, இந்த குற்றவாளிகளை தூக்கிலிடுவதற்கு அழைத்து செல்ல, இவர் எல்லாவற்றையும் செய்தார், பாராட்டுவோம் என்று அவருடைய பெயரை டிரண்டாக்கி வருகின்றனர். அதுமட்டுமின்றி இரண்டு பெண்கள்(Seema Samridhi Kushwaha, நிர்பயாவின் தாயார்) ஒரு பெண்ணுக்காக இத்தனை ஆண்டுகள் போராடி வெற்றி பெற்றுள்ளனர்.

சல்யூட் என்றும் #NirbhayaCase #NirbhayaVerdict என்ற ஹேஷ்டெக்குகளையும் டிரண்டாக்கி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்