கொரோனாவில் இருந்து முழுமையாக மீண்டதாக அறிவிக்கப்பட்ட நபர் திடீரென உயிரிழப்பு!

Report Print Raju Raju in இந்தியா

இந்தியாவுக்கு வந்திருந்த இத்தாலிய சுற்றுலா பயணி கொரோனாவில் இருந்து மீண்ட நிலையிலும் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

இத்தாலியை சேர்ந்த ஒரு குழுவினர் இந்தியாவுக்கு சுற்றுலா வந்த நிலையில் அவர்களில் 16 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டது.

அந்த குழுவை சேர்ந்த ஆண்ட்ரே கேர்லி என்பவர் கடந்த பிப்ரவரி 29ஆம் திகதி இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள மருத்துவமனையில் கொரோனா அறிகுறியுடன் சேர்க்கப்பட்டார்.

அவருக்கு கொரோனா இருப்பது மார்ச் 2ஆம் திகதி உறுதி செய்யப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது.

இதையடுத்து கடந்த 14ஆம் திகதி கொரோனா பாதிப்பில் இருந்து ஆண்ட்ரே முழுமையாக மீண்டார். இது பரிசோதனை அறிக்கையிலும் உறுதி செய்யப்பட்டது.

இந்த நிலையில் மீண்டும் அடுத்தநாள் ஆண்ட்ரேவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அதிர்ச்சியடைந்த அவர் மனைவி, கணவரை மருத்துவமனையில் சேர்த்தார்.

அங்கு அவருக்கு நுரையீரலில் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது, இந்த சூழலில் நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டு ஆண்ட்ரே உயிரிழந்தார்.

ஆண்ட்ரேவின் மனைவிக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு பின்னர் சிகிச்சையின் மூலம் குணமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்