தூக்கிலிடப்பட்ட பின்னரும் 15 நிமிடங்கள் துடித்த நிர்பயா குற்றவாளிகளின் இதயம்! பிரேத பரிசோதனை முடிவுகள்

Report Print Raju Raju in இந்தியா

நிர்பயா வழக்கில் தூக்கில் போடப்பட்ட 4 பேரின் உடல்களுக்கு 5 மணி நேரம் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் அது தொடர்பிலான முக்கிய தகவல்களை மருத்துவர் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா ஓடும் பேருந்தில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார்.

இந்த வழக்கில் நான்கு குற்றவாளிகளுக்கு நேற்று தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

மருத்துவர் பி.என்.மிஸ்ரா தலைமையிலான மருத்துவர்கள் நான்கு பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனை செய்தனர். சுமார் 5 மணிநேரம் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

இதுகுறித்து பேசிய மருத்துவர் மிஸ்ரா, தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டவர்களுக்கும் சிறையில் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டவர்களுக்கும் பிரேத பரிசோதனை செய்வதில் நிறைய வேறுபாடுகள் இருக்கிறது.

அனுபவம் வாய்ந்த ஹேங்மேன் ஒருவர் சிறைக் கைதிக்கு தூக்குத்தண்டனை நிறைவேற்றும் போது உடையும் கழுத்து எலும்புகளுக்கும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொள்பவர்களின் கழுத்து எலும்புகளுக்கும் சில வித்தியாசங்கள் இருக்கும்.

கழுத்து எலும்புகள் உடைந்தவுடன் அவர் மயக்க நிலைக்குச் சென்றுவிடுவார். அதையடுத்து, சில நிமிடங்களில் அவர் உயிரிழந்துவிடுவார்.

சிறை விதிமுறைகளின்படி தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்டிருக்கிறதா என ஆய்வு செய்தோம்

இதயத்துடிப்புகளை வைத்து இதைக் கணக்கிட்டோம், சிறை விதிகளைப் பின்பற்றி முறையாக தூக்கிலிடப்பட்ட பின் 15 முதல் 20 நிமிடங்கள் அந்த நபரின் இதயம் துடித்துக்கொண்டே இருக்கும்.

இப்படி இருந்தால் தான் தூக்குத் தண்டனையானது முறையாக நிறைவேற்றப்பட்டது என அர்த்தம் என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்