தூக்கிலிடப்பட்ட நிர்பயா குற்றவாளி சிதைக்கு தீ மூட்டிய 9 வயது மகன்! தரையில் புரண்டு அழுத மனைவி.. புகைப்படங்கள்

Report Print Raju Raju in இந்தியா

நிர்பயா வழக்கில் தூக்கிலிடப்பட்ட குற்றவாளி அக்‌ஷயின் உடலுக்கு அவரின் 9 வயது மகன் இறுதிச்சடங்கு செய்த நிலையில் அது தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளது.

டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா ஓடும் பேருந்தில் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக இறந்தார்.

இவ்வழக்கில் 4 பேருக்கு நேற்று முன் தினம் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. பின்னர் நால்வரின் உடலுக்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டு குடும்பத்தாரிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது.

நான்கு குற்றவாளிகளில் ஒருவரான அக்‌ஷய் தகூரின் உடல் பீகாரில் உள்ள அவரின் சொந்த கிராமத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

கணவனை எப்படியாவது காப்பாற்ற அக்‌ஷயின் மனைவி புனிதா போராடியும் முடியவில்லை.

அக்‌ஷய் கொல்லப்பட்டதும் தன்னையும் கொன்றுவிடுமாறு கூறி புனிதா அழுதவாறு மயங்கியது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் நேற்று இறுதிச்சடங்கின் போது கணவர் அக்‌ஷய் சடலத்தின் மீது படுத்தபடி கதறி அழுது கொண்டிருந்தார் புனிதா.

தம்பதியின் 9 வயது மகன் தலைக்கு மொட்டை அடிக்கப்பட்ட நிலையில் தந்தையின் உடலை பார்த்து அழுதான்.

சடலத்தை ஊருக்கு ஆம்புலன்சில் எடுத்து வர கூட புனிதாவிடம் பணம் இல்லாத நிலையில் ஊர் மக்களிடம் பணம் வசூலித்த பின்னரே சடலம் கொண்டு வரப்பட்டது.

பின்னர் சுடுகாட்டுக்கு உடலை கொண்டு செல்ல தயார் செய்யப்பட்ட போதும் கணவரை பிரிய மனம் இல்லாமல் தரையில் புரண்டு அழுதார் புனிதா.

இதன் பின்னர் அக்‌ஷய் உடல் சுடுகாட்டுக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் சிதைக்கு அவர் மகன் தீ மூட்டினார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்