கொரோனாவால் மூடப்பட்ட கோவில்கள்! புரோகிதர் இல்லாமல் சாலையில் பெண்ணுக்கு தாலிகட்டிய மாப்பிள்ளை

Report Print Raju Raju in இந்தியா

இந்தியாவில் சுய ஊரடங்கு கடைபிடிக்கப்படுவதால் கோவில்கள் மூடப்பட்டுள்ள நிலையில் கோவில் முன் சாலையோரங்களில் திருமணம் நடைபெற்றது.

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக இன்று நாடு தழுவிய சுய ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இதன் காரணமாக தமிழகத்திலும் பெரும்பாலான கடைகள், கோவில்கள் மூடப்பட்டுள்ளன.அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு மட்டுமே மக்கள் வெளியே வர வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

இன்று தமிழகம் முழுவதும் ஏராளமான திருமணங்கள் நடைபெற இருந்தன. ஊரடங்கு கடைபிடிக்கப்படுவதால் சில திருமணங்கள் தள்ளி வைக்கப்பட்டன. ஆனால் இன்று திருமணத்திற்கு உதந்த நாள் என்று கூறி சிலர் திருமணத்தை நடத்த முடிவு செய்தனர்.

கடலூரில் கோவில்கள் மூடப்பட்டுள்ளதால் கோவிலுக்கு வெளியே சாலையில் வைத்து குடும்பத்தினர் சிலர் முன்னிலையில் வைத்து புரோகிதர் இல்லாமல் திருமணம் நடைபெற்றது.

இது தொடர்பான புகைப்படம் சமூகவலைதளத்தில் வைரலாகியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்