கேரளாவில் 92 பேருக்கு கொரோனா! மாநிலம் முழுவதும் ஊரடங்கு.. முதல்வர் முக்கிய உத்தரவு

Report Print Basu in இந்தியா

இந்தியாவின் கேரளா மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 92 ஆக அதிகரித்துள்ள நிலையில் மாநில முதல்வர் முக்கிய உத்தரவிட்டுள்ளார்.

இந்தியாவில் கொரோனாவால் 7 பேர் பலியாகியுள்ள நிலையில், 433 பேருக்கு நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

கேரளா மாநிலத்தில் திங்கட்கிழமை 28 பேருக்கு கொரோனா உறுதியானது. இதன் மூலம் மாநிலத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 92 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், கேளரா முழுவதும் இன்று இரவு முதல் மார்ச் 31ம் திகதி வரை ஊரடங்கு அமல்படுத்துவதாக கேரளா முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.

மேலும், காசர்கோடு மாவட்டத்தில் கடுமையான நடவடிக்கைகள் விதிக்கப்பட்டுள்ளன. மாநில எல்லைகள் மூடப்பட்டு கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...