என்னை தாக்கிய கொரோனா என் குடும்பத்துக்கு வரவேண்டாம்! உண்மை தெரியாமல் தற்கொலை செய்து கொண்ட இளைஞன்

Report Print Raju Raju in இந்தியா

இந்தியாவில் தனக்கு ஏற்பட்ட கொரோனா குடும்பத்தாரையும் தாக்க விரும்பவில்லை என கடிதம் எழுதிவைத்துவிட்டு இளைஞன் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தின் பில்குவா நகரை சேர்ந்தவர் சுஷில் சிங் (28). இவருக்கு சில நாட்களாக தொடர் ஜலதோஷம் மற்றும் இருமல் இருந்துள்ளது.

இதையடுத்து தனக்கு கொரோனா இருக்கலாம் என பயந்தபடி இருந்தார்.

மருத்துவரிடம் சுஷில் சென்ற நிலையில், தொடர்ந்து உனக்கு உடல் நிலை சரியாகாமல் இருந்தால் கொரோனாவாக இருக்கலாம் என அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனால் தனக்கு கொரோனா இருப்பதாக உறுதியாக நம்பியுள்ளார் சுஷில். இதன் காரணமாக பயத்தில் இருந்த அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சுஷில் சடலத்தை மீட்ட பொலிசர் அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தையும் கைப்பற்றினார்கள்.

அதில், என்னால் என் குடும்பத்துக்கு கொரோனா வரக்கூடாது, அவர்களை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக இந்த முடிவை எடுப்பதாக எழுதப்பட்டிருந்தது.

இதையடுத்து சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரித்து வரும் நிலையில் சுஷில் பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பின்னரே அவருக்கு கொரோனா பாதிப்பு இருக்கிறதா என்பது தெரியவரும் என கூறியுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...