கொரோனா அச்சத்தில் 'சற்று தள்ளி நில்' எனக்கூறிய நபர் குத்திக்கொலை!

Report Print Vijay Amburore in இந்தியா

கொரோனா பயம் காரணமாக சற்று தள்ளி நில் எனக்கூறிய நபர் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் ஊட்டியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவிட்-19 வைரஸானது உலகெங்கிலும் பேரழிவை ஏற்படுத்தி வரும் நிலையில், அதிலிருந்து தற்காத்துக்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை வழிமுறைகளை உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது

ஆனால் அது பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லாததால், மத மற்றும் மூட நம்பிக்கைகளால் ஆங்காங்கே அத்தகைய வழிமுறைகளைள் பொதுமக்களால் மீறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தமிழகத்தில் ஊட்டியை சேர்ந்த ஒருவர், கொரோனா அச்சம் காரணமாக தனக்கு அருகில் நின்றவரை சற்று தள்ளி நிற்குமாறு கூறியுள்ளார்.

அதனால் ஆத்திரமடைந்த மற்றொரு நபர், தன்னை தள்ளி நிற்குமாறு கூறிய நபரை குத்திக்கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்