கொரோனா விவகாரம்... ஆணையை மீறினால் பாஸ்போர்ட் பறிமுதல்: வெளிநாடு திரும்பியவர்களுக்கு எச்சரிக்கை

Report Print Arbin Arbin in இந்தியா

வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட பின்னரும் குடியிருப்புகளை விட்டு வெளியே வந்தால் அவர்களது பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உலக நாடுகள் பலவற்றை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது.

நாடு முழுவதும் 536 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 10 பேர் மரணமடைந்துள்ளனர்.

தமிழகத்தில் 18 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், வெளிநாட்டில் இருந்து வந்தவர்களால் கடுமையாக பாதிப்பு ஏற்படுகிறது. இதுவரை வெளிநாட்டில் இருந்து வந்த 15000 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் கண்டிப்பாக சுய தனிமைப்படுத்தலை பின்பற்றி தங்கள் வீடுகளை விட்டு வெளியே வரக்கூடாது.

ஒருவேளை அரசு விதித்த கட்டுப்பாடுகளை மீறி வெளியே வந்தால் அவர்களது பாஸ்போர்ட்டுகள் பறிமுதல் செய்யப்படும்.

அவர்கள் தங்கள் வெளிநாட்டு பயணங்கள் பற்றிய தகவல்களை தெரிவிக்காவிடில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்