தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ்க்கு முதல் பலி!

Report Print Basu in இந்தியா

தமிழகத்தில் கொரோனா வைரஸ் உறுதிசெய்யப்பட்டு மதுரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நபர் உயிரிழந்ததாக சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

கொரோனாவால் தமிழகத்தில் ஏற்பட்ட முதல் மரணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, கொரோனா உறுதிசெய்யப்பட்டு மதுரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 54 வயதான நோயாளியின் நிலைமை மிகவும் மோசமடைந்து வருவதாக சுகாதார அமைச்சர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், எங்கள் சிறந்த முயற்சிகள் இருந்தபோதிலும், மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நபர் சில நிமிடங்களுக்கு முன்பு காலமானார்.

அவருக்கு ஸ்டீராய்டு சார்ந்த COPD உடன் உயர் இரத்த அழுத்தத்துடன் கட்டுப்பாடற்ற நீரிழிவு நோயின் நீண்டகால மருத்துவ வரலாறு இருந்தது என சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் மொத்தம் 10 பேர் கொரோனா நோய்த்தொற்று பாதிப்பால் உயரிழந்துள்ளனர்.

கடந்த 24 மணிநேரத்தில் 37 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்ட நிலையில் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 536 ஆக அதகிரித்துள்ளது. தமிழகத்தில் 18 பேருக்கு கொரோனா உறுதியானது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...