லண்டனிலிருந்து இந்தியா திரும்பிய மகன்.. அலட்சியமாக இருந்த டிஎஸ்பி உட்பட இருவருக்கு பரவிய கொரோனா!

Report Print Basu in இந்தியா

தெலுங்கானாவின் பத்ராட்ரி கோத்தகுடம் மாவட்டத்தைச் சேர்ந்த டிஎஸ்பி-க்கு கொரோனா நோய்த்தொற்று உறுதியானதாக அம்மாநில பொலிஸ் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

தெலுங்கானா பொலிஸ் அளித்த தகவலின் படி, மார்ச்18ம் திகதி லண்டனிலிருந்து வந்த டிஎஸ்பி-யின் மகன், மார்ச் 19ம் திகதி திருமண நிகழ்வில் கலந்துக்கொண்டுள்ளார்.

அதுமட்டுமின்றி பல பொது இடங்களுக்கு சென்றுள்ளார். சமீபத்தில் அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனைியல் கொரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதியானது.

இதனையடுத்து, அவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் பொலிஸ் டிஎஸ்பி-யும், அவரது தந்தையுமான அலி(57) மற்றும் அவர்களது வீட்டில் சமயல் பணிபுரியும் 33 வயதான பெண்ணுக்கும் கொரோனா உறுதியானது.

இதனையடுத்து, டிஎஸ்பி அலியின் மனைவி மற்றும் அவரது வீட்டில் பணியாற்றி பொலிஸ் அதிகாரிகள் என அனைவரும் 14 நாட்டுகளுக்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மகன் லண்டனிலிருந்து வந்தது குறித்து சுகாதாரத்துறைக்கு தகவல் அளிக்க தவறிய டிஎஸ்பி அலி மற்றும் அவரது மகன் மீது தெலுங்கானா பொலிசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மேலும், டிஎஸ்பியின் மகன் தங்கியிருந்த 3 கி.மீ தூரத்திற்குள் நுழைய அதிகாரிகள் கட்டுப்பாடு விதித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...