கொரோனா அச்சுறுத்தல்: 4 பேருக்கு மேல் கூட தடை! 100 பேரை கூட்டி அடிவாங்கிய பெண் சாமியார்

Report Print Abisha in இந்தியா

இந்தியாவில் 100பேரை ஒன்று கூட வைத்த பெண் சாமியாரை பொலிசார் அடித்து துவைத்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இந்திய பிரதமர் மோடி மக்கள் ஒன்று கூடுவதை தவிர்க்க நாடு முழுவதும் 144தடை உத்தரவை பிறப்பித்தார். அதன்படி மக்கள் ஒன்று கூடவோ வெளியில் சுற்றவோ தடை நீடித்து வருகிறது.

இந்நிலையில், உத்தரபிரதேசத்தை சேர்ந்த பெண் சாமியார் ஒருவர் மத போதனை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளார். அதில், 100க்கும் மேற்பட்டோர் கலந்த கொண்டுள்ளனர். சாமியாரின் வீட்டிலேயே நடந்த கூட்டத்தை கலைக்கும்மாறு பொலிசார் வந்து அறிவுரை கூறியுள்ளனர். ஆனால், அந்த சாமியார் கேட்காமல் இருந்துள்ளார்.

தொடர்ந்து பொலிசார் அங்கு கூடியவர்களிடம் கலைந்து செல்ல அறிவுறுத்தியுள்ளனர். ஆனால், கோவம் கொண்ட அந்த பெண் சாமியார் பட்டாகத்தியை எடுத்து சுழற்றி பொலிசாருக்கு மிரட்டல் விடுத்துள்ளார். இதனால், பொறுமை இழந்த பொலிசார் அந்த பெண் சாமியாரை அடித்து துவைத்துள்ளனர்.

மேலும், அங்கு கூடியிருந்த அந்த சாமியாரின் பக்தர்களையும் அடித்துள்ளனர். இதனால், அவர்கள் அங்கிருந்து தலைதெறித்து ஓடியுள்ளனர்.

அதில், சிலரையும் பெண் சாமியாரையும் பொலிசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

தற்போது அப்பகுதியில் அமைதி நிலவுவதாக பொலிசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்