கொரோனா பரிசோதனை முடிவு வெளிவருவதற்குள் உயிரிழந்த தமிழகத்தை சேர்ந்த நபர்! வெளிநாட்டில் இருந்து திரும்பியவர்

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நபர் அதன் பரிசோதனை முடிவு வெளிவராத நிலையில் உயிரிழந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா வார்டில் 40 வயது நபர் ஒருவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

கொடிமுனையை சேர்ந்த அவர் கடந்த 3ஆம் திகதி குவைத்தில் இருந்து தமிழகம் திரும்பியவர் என தெரியவந்துள்ளது.

அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் அதன் முடிவுக்காக காத்திருந்தார்.

இந்நிலையில் பரிசோதனை முடிவு வெளிவராத நிலையில் திடீரென அவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த நபரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் இன்று மாலை வெளிவரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன்பின்னரே அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தாரா என்பது தெரியவரும்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்